Published:Updated:

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணம்: மருத்துவர்களை இடைநீக்கம் செய்தார் மம்தா!

விகடன் விமர்சனக்குழு

கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகட் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகள் திடீரென மரணம் அடைந்தது. இதன் காரணமாக 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு நர்ஸை அதிரடியாக இடைநீக்கம் செய்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20–ம் தேதி பிறந்த 2 குழந்தைகள் திடீரென மரணம் அடைந்தன. இதற்கு மருத்துவர்கள் மற்றும் நர்சுகளின் அலட்சியப்போக்கே காரணம் என்று புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி உடனே தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

சுகாதாரத்துறை விசாரணைக்குழு நடத்திய விசாரணையில், புதிதாக பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் அதிக வெப்பத்தில் வைத்ததால்தான் அவை இறந்தன என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்தக் குழு, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது.

அந்த பரிந்துரையை ஏற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று, 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு நர்சை ஒரு மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 3 நர்சுகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி நடவடிக்கை, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.