Election bannerElection banner
Published:Updated:

நெல்லை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பரிதாப பலி!

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பரிதாப பலி!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று,  இன்று காலை நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பிளாக்கோட்டைபாறையில், சாலை தடுப்புச் சுவர் மீது திடீரென பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

நெல்லை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பரிதாப பலி!

இந்த கோர விபத்தில், அந்த பேருந்தில் பயணம் செய்த 5 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

நெல்லை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பரிதாப பலி!

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநர் உறங்கியதே விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது

நெல்லை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பரிதாப பலி!

மேலும், விபத்திற்குள்ளான பேருந்தில் பல பயணிகள் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பரிதாப பலி!

பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நெல்லை-நாகர்கோவில் நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பரிதாப பலி!

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு