Published:Updated:

சிக்குகிறார் சசி தரூர் : ''சுனந்தா புஸ்கர் மரணம் இயற்கையானது அல்ல''-டெல்லி போலீஸ் கமிஷனர்

Vikatan Correspondent
சிக்குகிறார் சசி தரூர் : ''சுனந்தா புஸ்கர் மரணம் இயற்கையானது அல்ல''-டெல்லி போலீஸ் கமிஷனர்
சிக்குகிறார் சசி தரூர் : ''சுனந்தா புஸ்கர் மரணம் இயற்கையானது அல்ல''-டெல்லி போலீஸ் கமிஷனர்

முன்னாள் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஷி தெரிவித்துள்ளார்.

சிக்குகிறார் சசி தரூர் : ''சுனந்தா புஸ்கர் மரணம் இயற்கையானது அல்ல''-டெல்லி போலீஸ் கமிஷனர்

இது குறித்து டெல்லியில் இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,''  தங்களுக்கு கிடைத்த கடைசிக்கட்ட அறிக்கைகளின் அடிப்படையில், சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. . ஏற்கனவே டெல்லி 'எய்ம்ஸ் ' மருத்துவமனையில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் சுனந்தா புஷ்கர் விஷத்தால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.  ஆனால் எந்த விதமான விஷம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இங்கு இல்லை.

எனவே  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுனந்தாவின் உள்ளுறுப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வாஷிங்டன் நகரில்  எப்.பி.ஐ.யின்  ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல . அதேவேளையில் காற்றில் கரைந்து மரணத்தை ஏற்படுத்தும்  தன்மையுடைய  'போலோனியம்' என்ற கதிர்வீச்சு பொருளின் தாக்கம்அவரது உடல் உறுப்புகளில் இல்லை '' என்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி  சசிதரூரின் 51 வயது மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெகர் தராருடன் சசி தரூருக்கு தொடர்பு இருந்தாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

அத்துடன் சுனந்தா, அணு உலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும்  'போலோனியம் 'என்ற கதிரியக்க பொருளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. தற்போது அவர் போலோனியத்தால் கொல்லப்படவில்லை என தெரிய வந்துள்ளது. எனினும் இது 'இயற்கைக்கு எதிரான மரணம்' என்று சொல்லப்பட்டிருப்பதால், சசி தரூர், மீது போலீஸ் பிடி இறுகும் எனத் தெரிகிறது.

சுனந்தா மரணம் தொடர்பாக சசி தரூரின் உதவியாளர் நாராயண் சிங், ஓட்டுநர்கள் பஞ்ரங்சி, சஞ்சய் தீவான்  சசி தரூர் , சுனந்தாவின் இரு நண்பர்கள்  உள்ளிட்ட 6 பேரிடம் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நியமித்த  குழு சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை அளித்திருந்தது. டாக்டர் எம்.சி. மிஷ்ரா தலைமையிலான அந்தக் குழு. சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அவர் விஷத்தால் கொல்லப்பட்டிருப்பதாக  அறிக்கையும் அளித்திருந்தது.

இருப்பினும் சுனந்தா போலோனியத்தால் கொல்லப்பட்டிருப்பதாக சந்தேகம் நிலவியதால்,  அதனை உறுதி செய்யும் விதத்தில் அமெரிக்காவின் எப்.பி.ஐ ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. ஆய்வு முடிவுகள் குறித்து, எப்.பி.ஐ டெல்லி போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் 15 பக்க அறிக்கை அளித்திருந்தது. அதனை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சமர்ப்பித்து இறுதியாக  'சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல'  என டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஷி அறிவித்துள்ளார். 

அதே வேளையில் சுனந்தா கவலை மற்றும் பதற்றத்தை குறைக்க பயன்படும் 'அப்பரக்ஸ்' மாத்திரையை அதிகப்படியாக உண்டதால் இறந்துள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.