Published:Updated:

கோவையில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலையால் பரபரப்பு!

விகடன் விமர்சனக்குழு
கோவையில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலையால் பரபரப்பு!
கோவையில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலையால் பரபரப்பு!

கோவை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் வளாகத்தில்,  கல்லூரி மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. வாழப்பிடிக்கவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வி.என்.கே. கலை அறிவியல் கல்லூரி எனும் தனியார் மகளிர் கல்லூரி  செயல்பட்டு வருகிறது. இந்தக்  கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த மாணவி திவ்யா, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை இவர்,  கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார். இதைக் கண்ட சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவையில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலையால் பரபரப்பு!

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அங்கு மாணவி எழுதிய கடிதம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அது பற்றி கூறிய போலீசார், கடிதத்தில் "எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று  எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கிணற்றில் இருந்து மாணவி திவ்யாவின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே மாணவியின் தலையில் காயம் உள்ளதாலும், வாய், மூக்கில் ரத்தம் வடிவதாலும் மாணவியில் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரத்தில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், , தற்போது மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது  மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ச.ஜெ.ரவி