Published:Updated:

லாரியுடன் நேருக்கு நேர் மோதல்... உருக்குலைந்த அரசு பஸ்... 14 பேர் பலியான சோகம்!

Vikatan Correspondent
லாரியுடன் நேருக்கு நேர் மோதல்... உருக்குலைந்த அரசு பஸ்... 14 பேர் பலியான சோகம்!
லாரியுடன் நேருக்கு நேர் மோதல்... உருக்குலைந்த அரசு பஸ்... 14 பேர் பலியான சோகம்!

விருதுநகர் மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே அரசு பேருந்தும், சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்,  14 பேர் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரியுடன் நேருக்கு நேர் மோதல்... உருக்குலைந்த அரசு பஸ்... 14 பேர் பலியான சோகம்!

நெல்லையில் இருந்து இன்று பிற்பகலில் 53 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. மதுரை- விருதுநகர் எல்லையையொட்டி உள்ள தே.கல்லுப்பட்டி என்ற இடத்தில் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே சிமெண்ட் ஏற்றிக் கொண்டு வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

இதில், அரசு பேருந்தும், லாரியும் உருக்குலைந்தது. பேருந்து ஓட்டுநர் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,  இடிபாடுகளுக்குள் சிக்கிக் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.