Published:Updated:

ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா? வினுப்பிரியா வழக்கில் திருப்பம்

ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா? வினுப்பிரியா வழக்கில் திருப்பம்
ஒருதலைக்காதலன் செய்த விபரீதமா? வினுப்பிரியா வழக்கில் திருப்பம்


ருதலைக் காதலால் வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து சுரேஷ் வெளியிட்டுள்ளதாக சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த சேர்ந்த அண்ணாதுரை- மஞ்சு தம்பதியின் மகள் வினுப்பிரியா (22). ஆசிரியையான இவர், திருமணத்திற்கு தயாரான நிலையில், அவரது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, அதை ஃபேஸ்புக்கில் பரவவிட்ட மர்ம நபர், வினுப்பிரியா மாமா மற்றும் தந்தைக்கும் அனுப்பியதால், அவமானம் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொண்டார்.

மகளின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்க சைபர்கிரைம் போலீஸாருக்கு 2000 ரூபாயும், செல்போனும் லஞ்சமாக கொடுத்ததாக வினுப்பிரியாவின் தந்தை அண்ணாதுரை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாக மாறிய பிறகு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான குழுவினர் துரித விசாரணையைத் தொடங்கினர்.

வினுப்பிரியாவின் ஃபேஸ்புக் படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட நபர், எந்த இன்டர்நெட் புராட்டகால் நெட்வொர்க் முகவரியில் (ஐ.பி.எண்) இருந்து அனுப்பி இருக்கிறான் என்பதை சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனத்திடம் பேசி அலசி ஆராயும் பணியைத் தொடங்கினர். அவர்களின் தேடுதல் வேட்டைக்கு பலனாக வினுப்பிரியா புகைப்படத்தை மார்ஃபிங் செய்யப்பட்டதாக சொல்லப்படும் முகவரி (ஐ.பி. எண்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் புகுந்து சைபர்கிரைம் போலீஸார் பார்க்கையில், அதில் ஒரே ஐ.பி. எண்ணைபோல 100க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதைக் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாது, புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பரவவிட்ட நபருக்கு எப்படி தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் மாமா மற்றும் தந்தையின் செல்போன் எண் தெரிந்தது என்றும், தொடர்புக்கு என்று தந்தை அண்ணாதுரையின் செல்போன் எண்ணை எப்படி பதிவு செய்தான்? என்பதும் சந்தேகத்திற்கிடமாகியது. இதுதொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், கல்பாரப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமி, ஒருதலைக் காதலால் வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து சுரேஷ் வெளியிட்டுள்ளார். வினுப்பிரியா தற்கொலை வழக்கில் சுரேஷை தவிர வேறு யாருக்கும் தாெடர்பில்லை. கைதான சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.