Published:Updated:

`5ம் தேதி சிகிச்சைக்கு அனுமதி; இன்று உயிரிழப்பு!'-கொரோனாவால் ராமநாதபுரம் மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( விகடன் )

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பரமக்குடி, ஆர்.எஸ். மங்களம், ராமநாதபுரம் மற்றும் உச்சிப்புளி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் காவலர், தீ அணைப்புப் படை வீரர், சுகாதாரப் பணியாளர் என 24 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்றுக்குப் பலியானவர்களின் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டமும் இடம் பிடித்திருப்பது மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம்
ராமநாதபுரம்
உ.பாண்டி

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. உலகளவில் இந்த நோய் தாக்கத்திற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் மிகவும் குறைவுதான். அதிலும் தமிழகத்தில் மிகக் மிக குறைந்த அளவே பலியானவர்களின் எண்ணிக்கை உள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்களம், ராமநாதபுரம் மற்றும் உச்சிப்புளி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் காவலர், தீ அணைப்புப் படை வீரர், சுகாதாரப் பணியாளர் என 24 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் 23 பேருக்கு சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 நபர்களும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்டம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி இன்று உயிரிழந்தார்.

கீழக்கரை
கீழக்கரை
உ.பாண்டி

கடந்த 5-ம் தேதி கொரோனா சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த மூதாட்டிக்கு ஏற்கெனவே நெஞ்சுவலி, தீவிர சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றுகளும் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இவர் உயிரிழந்ததன் மூலம் கொரோனாவுக்குப் பலியானவர்களின் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டமும் இடம்பெற்றது மாவட்ட மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு