Published:Updated:

கர்நாடகா குடகில் ஒரே மாதத்தில் ஆறு யானைகள் பலி... எமனாகும் மின் கம்பிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கர்நாடகா குடகில் ஒரே மாதத்தில் ஆறு யானைகள் பலி... எமனாகும் மின் கம்பிகள்!
கர்நாடகா குடகில் ஒரே மாதத்தில் ஆறு யானைகள் பலி... எமனாகும் மின் கம்பிகள்!

கர்நாடகா குடகில் ஒரே மாதத்தில் ஆறு யானைகள் பலி... எமனாகும் மின் கம்பிகள்!

கர்நாடக மாநிலம் குடகில் நான்கு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

கர்நாடகா குடகில் ஒரே மாதத்தில் ஆறு யானைகள் பலி... எமனாகும் மின் கம்பிகள்!

கோப்புப் படம்


கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டம் உள்ளது. வனப்பகுதி அருகிலுள்ள அந்த மாவட்டத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கோவையில் அடிக்கடி யானைகள் பலியாவது போல, அங்கேயும் யானைகள் பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, உயர் அழுத்த மின்கம்பிகள் அமைப்பதால் யானைகள் உயிரிழப்பு தொடர் கதையாகி வருகிறது.


இந்த நிலையில், அங்கு விர்ஜா பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகள் தாக்கி, நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன. இது இந்த மாதத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம். ஏற்கெனவே, கடந்த 14-ம் தேதி இரண்டு யானைகள் இதே காரணத்தால் உயிரிழந்தன. அந்தச் சம்பவம் நடந்த 15 நாள்களுக்குள் தற்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 


மின் கம்பிகளினால், யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், இந்த விவகாரம் தொடர்பாக மின்சாரத்துறையுடன், வனத்துறை ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு