Published:Updated:

உ.பி. குழந்தைகள் பலியான சம்பவம்: மருத்துவக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!

உ.பி. குழந்தைகள் பலியான சம்பவம்: மருத்துவக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!
உ.பி. குழந்தைகள் பலியான சம்பவம்: மருத்துவக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், ஒரே நாளில் கோரக்பூர் மருத்துவமனையில் 23 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. குழந்தைகள் தவிரத்து, மேலும் 30 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்திருப்பதாக பரவலாக செய்திகள் வெளியானபோதிலும், அந்த தகவலை உத்தரப்பிரதேச மாநில அரசு மறுத்துள்ளது.

மூன்று நாள்களில் குழந்தைகள் உள்பட 63 பேர் இந்த மருத்துவமனையில் உயிரிழந்திருப்பதாக வெளியான தகவலையடுத்து, இந்தியா முழுவதும் உத்தரப்பிரதேச அரசு மீது பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உத்தரப்பிரதேச அரசு, தற்போது பாபா ராகவ்தான் மருத்துவக்கல்லூரி முதல்வரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுமார் இரண்டு மணி நேரத்திற்கு ஆக்ஸிஜன் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங், குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல என்று குறிப்பிட்டார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.


 

அடுத்த கட்டுரைக்கு