Published:Updated:

தனியார் பள்ளி குளத்தில் மூழ்கி மாணவன் பலி;பெற்றோர் முற்றுகை!

தனியார் பள்ளி குளத்தில் மூழ்கி மாணவன் பலி;பெற்றோர் முற்றுகை!
News
தனியார் பள்ளி குளத்தில் மூழ்கி மாணவன் பலி;பெற்றோர் முற்றுகை!

தனியார் பள்ளி குளத்தில் மூழ்கி மாணவன் பலி;பெற்றோர் முற்றுகை!

சென்னை: சென்னை கே கே நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நீச்சல் குளத்தில்  மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவத்தால், அந்த பள்ளியை பெற்றோர்கள்  முற்றுகையிட்டனர்.

தனியார் பள்ளி குளத்தில் மூழ்கி மாணவன் பலி;பெற்றோர் முற்றுகை!

சென்னை கே கே நகர் பகுதியில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று  வந்த ரஞ்சன் என்ற  மாணவன்,இன்று நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது அம்மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.இது குறித்த தகவல் அறிந்ததும் 

##~~##
அம்மாணவனின் பெற்றோர், அப்பள்ளியில் பயிலும்  பிற மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அவர்களை காவலாளி உள்ளே அனுமதிக்காத நிலையில்,அவருக்கும்,பெற்றோர்களுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்ட்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாணவன் நீரில் மூழ்கியது தெரியாமல் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாக  பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

மாணவன் உயிரிழந்தது குறித்து கேகே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ரஞ்சன், தமிழ் திரைப்பட இயக்குனர் மனோகரனின் மகன் ஆவார்.

ரஞ்சன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவனுடன் 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.