Published:Updated:

நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியானது எப்படி?; 5 பேர் கைது

நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியானது எப்படி?; 5 பேர் கைது
நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியானது எப்படி?; 5 பேர் கைது
நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியானது எப்படி?; 5 பேர் கைது

சென்னை:  நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக, நீச்சல் பயிற்சியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்திரி பள்ளிக்கூட நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்ற மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவன் ரஞ்சன் இறந்த தகவல் கிடைத்தவுடன் நேற்று பகலில், சம்பவம் நடந்த பத்ம சேஷாத்திரி பள்ளி முன்பு மாணவ-மாணவிகளின் பெற்றோர் நூற்றுக்கணக்கில் திரண்டனர். பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அறிவித்து,மற்ற மாணவ-மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் பிற்பகல் 2.30 மணி அளவில்தான் பள்ளி `கேட்'டை திறந்து மாணவ-மாணவிகளை வெளியே விட்டனர்.அதன்பிறகு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, மாணவன் ரஞ்சன் இறந்த சம்பவம் தொடர்பாக, நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர், உயிர்காப்பாளர் அருண்குமார், உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன், நீச்சல்குள பராமரிப்பாளர் ரவி, நீச்சல்குள பொறுப்பாளர் ரெங்காரெட்டி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

##~~##
பின்னர் அவர்கள் மாலையில், சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு மலர்விழி, 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பலியானது எப்படி?
மாணவன் ரஞ்சன் நீச்சல் குளத்தில் பலியானது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஞ்சன் பலியான நீச்சல் குளம் 60 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்டது என்று கூறப்படுகிறது.இந்த நீச்சல் குளம் 3 பிரிவாக இருக்கும்.முதல் பகுதி ஆழம் குறைவான பகுதி. அது 3 அடி ஆழம் கொண்டது. இதில்தான் மாணவன் ரஞ்சன் நீச்சல் பயிற்சி பெற்று உள்ளான். அடுத்து 4 அடி ஆழம் உள்ள பகுதியாகும். 3-வதாக 7 அடி ஆழம் உள்ள பகுதி உள்ளது.
ரஞ்சன் 3 அடி ஆழம் உள்ள பகுதியில் பயிற்சி பெற்று இருக்கிறான்.பயிற்சி முடிந்ததும்,மாணவர்களை வெளியேற சொல்லிவிட்டு, பயிற்சியாளர் ராஜசேகர் சற்று தள்ளி சென்று இருக்கிறார்.ரஞ்சனோடு பயிற்சி பெற்ற மற்ற 25 மாணவர்களும் நீச்சல் குளத்தைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். ரஞ்சன் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறும் போது, தவறி நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கிறான்.இதை பயிற்சியாளர் ராஜசேகரும், உயிர் காப்பாளர் அருண்குமாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சற்று நேரம் கழித்து தான் ரஞ்சன் தண்ணீருக்குள் விழுந்து கிடந்ததை ராஜசேகர் பார்த்து உள்ளார். அதன்பிறகு ஓடிச்சென்று ரஞ்சனை தூக்கி இருக்கிறார்கள். அதற்குள் அவன் வயிறு முட்ட தண்ணீரை குடித்து மயக்கமாகி, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழந்து இருக்கிறான்.
2-வதாக இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. மற்ற மாணவர்கள் வெளியேறிய பிறகு, ரஞ்சன் மட்டும் வெளியேறாமல், நீச்சல் குளத்தின் சற்று ஆழமான பகுதிக்கு போனதால், மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.