Published:Updated:

கொரோனா :`மூக்கில் உடைந்த குச்சி; ஆம்புலன்ஸ் தாமதம்!’ - குழந்தைக்கு நேர்ந்த அவலம்

கொரோனா  Swab test
கொரோனா Swab test

``குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது.”

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே இதுதொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியையே ஏற்படுத்துகின்றன. கொரோனா வைரஸ் பரவும் முறைகள், அதிகரிக்கும் எண்ணிக்கைகள், மருத்துவமனையில் நிகழும் அலட்சியங்கள், இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதில் அலட்சியங்கள் எனப் பல செய்திகள் வேதனைக்கு உரியதாக உள்ளன. இந்த நிலையில், தற்போது சவுதியில் குழந்தை ஒன்று கொரோனா பரிசோதனை செய்யும்போது இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா
கொரோனா

சவுதியில், அதிக உடல் வெப்பநிலை காரணமாகக் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று குழந்தைக்கு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொண்டனர். அப்போது, பரிசோதனையில் பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது. இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். எனினும், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது.

கொரோனா: மாரடைப்பு, மூச்சுத் திணறல்! - விழுப்புரத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு

குழந்தையின் தந்தையான அப்துல்லா அல் ஜவுஃபான், மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போது குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுக்க அனுமதி மறுத்ததாகக் கூறியுள்ளார். ஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைநல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுயநினைவை இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்த அவர் குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியுள்ளது. இதனிடையே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணம் மற்றும் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை மரணம் தொடர்பாக அப்துல்லாவுக்கு அமைச்சர் தவுஃபிக் அல் ரபியா இரங்கலும் தெரிவித்துள்ளார்.

`மூணு நாளா மண்ணைத்தான் சாப்பிட்டிருக்கான்' -  தாயிடம் மாட்டிய குழந்தை | Shocking
அடுத்த கட்டுரைக்கு