Published:Updated:

தூக்கில் தொங்கிய இளம்பெண்... ஆணவக்கொலையா?

ஆணவக்கொலை?
பிரீமியம் ஸ்டோரி
ஆணவக்கொலை?

‘என்னை ஏதாவதொரு ஹோம்ல சேர்த்துவிடுங்க. எங்க வீட்டுக்கு அனுப்பினா என்னைக் கொன்னுடு வாங்க’னு போலீஸ்காரங்ககிட்ட சொல்லி அழுதா சாவித்திரி.

தூக்கில் தொங்கிய இளம்பெண்... ஆணவக்கொலையா?

‘என்னை ஏதாவதொரு ஹோம்ல சேர்த்துவிடுங்க. எங்க வீட்டுக்கு அனுப்பினா என்னைக் கொன்னுடு வாங்க’னு போலீஸ்காரங்ககிட்ட சொல்லி அழுதா சாவித்திரி.

Published:Updated:
ஆணவக்கொலை?
பிரீமியம் ஸ்டோரி
ஆணவக்கொலை?

காவல்துறையினரால் காதலனிடமிருந்து பிரித்துவைக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. ‘இது ஆணவக்கொலை’ என்று புகார் தெரிவித்திருக்கிறார் காதலன்.

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையைச் சேர்ந்த விவேக்கும், திருவரங்குளத்தைச் சேர்ந்த சாவித்திரியும் காதலித்துள்ளனர். காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்குத் தெரிந்து, எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக ஜூன் 7-ம் தேதி கோயம்புத்தூர் கிளம்பினர். அதன் பிறகு நடந்த சம்பவங்களை விவேக் விவரித்தார்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 சாவித்திரி, விவேக்
சாவித்திரி, விவேக்

‘‘கோயம்புத்தூர் போறப்போ... குளித்தலை செக்போஸ்ட்ல போலீஸ் மறிச்சுட்டாங்க. காதல் விஷயத்தைச் சொன்னோம். எனக்கு 21 வயசு பூர்த்தி ஆகலைங்கிறதால உடனே ரெண்டு பேர் வீட்டுக்கும் தகவல் சொல்லிட்டாங்க. ‘என்னை ஏதாவதொரு ஹோம்ல சேர்த்துவிடுங்க. எங்க வீட்டுக்கு அனுப்பினா என்னைக் கொன்னுடு வாங்க’னு போலீஸ்காரங்ககிட்ட சொல்லி அழுதா சாவித்திரி. ஆனா, போலீஸ்காரங்க கேட்கலை. அவங்க அம்மாகூட அனுப்பிட்டாங்க. போகும்போது கூட, ‘நாலு மாசம் கழிச்சு நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்’னு சொல்லிட்டுத்தான் போனா.

ஜூன் 9-ம் தேதி, சாவித்திரியின் சொந்தக்காரங்க சிலர் என்னைத் தூக்கிட்டுப் போய் காட்டுக்குள்வெச்சு, ‘உனக்கு எங்க சாதிப் பொண்ணு கேட்குதா’னு அடிச்சாங்க. ஆட்கள் வந்ததால என்னை அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க. அடுத்த நாளே, `சாவித்திரி தற்கொலை செஞ்சுக்கிட்டா’ன்னு தகவல் வந்துச்சு. போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்லாம அவசர அவசரமா கொண்டுபோய் எரிச்சுட்டாங்க. சாவித்திரியை அவங்க சொந்தக்காரங்களே கொன்னுருப் பாங்களோனு சந்தேகமா இருக்கு’’ என்றார் கண்ணீருடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஷலோமி, ‘‘இது திட்டமிட்ட ஆணவக்கொலை. சாவித்திரிக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தவறிய போலீஸார்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கை நேர்மையுடன் விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்’’ என்றார்.

தூக்கில் தொங்கிய இளம்பெண்... ஆணவக்கொலையா?

சாவித்திரியின் உறவினர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் சாவித்திரியின் அப்பா இறந்துபோனார். சாவித்திரிக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயமும் பண்ணியாச்சு. இந்த நிலைமையிலதான் வீட்டை விட்டுக் கிளம்பிடுச்சு. அதனால மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. அந்த ஆதங்கத்துல சாவித்திரியின் அம்மா திட்டவும், சாவித்திரி தூக்குல தொங்கிடுச்சு’’ என்றார்.

குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் திருமலைராஜனிடம் பேசியபோது, ‘‘விவேக், திருமண வயது நிரம்பாதவர். அதுமட்டுமல்லாமல், சாவித்திரி தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகச் சொன்னதால்தான் அனுப்பிவைத்தோம். அதன் பிறகு நடந்தது பற்றி எங்களுக்குத் தெரியாது’’ என்றார்.

திருவரங்குளம் வி.ஏ.ஓ-வான இளையராஜா அளித்த புகாரின் பேரில் சாவித்திரியின் தாய் சாந்தி உட்பட ஏழு பேர்மீது ஆலங்குடி போலீஸார் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். ஆனால், தடயவியல் அறிக்கையில் தற்கொலை செய்திருப்பதற்கான தடயங்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism