Published:Updated:

தடாகத்தில் குதித்த மருத்துவ மாணவருக்கு நேர்ந்த சோகம்... தடைசெய்யப்பட்ட வனப் பகுதியில் விபரீதம்!

தடைசெய்யப்பட்ட வனப் பகுதியில் விபரீதம்

கேரளாவைச் சேர்ந்த ஜோயல் என்ற மாணவர் தடாகத்தில் குதித்திருக்கிறார். சரிவர நீச்சல் தெரியாத அவரால் தண்ணீருக்குள்ளிருந்து மேலே வர முடியவில்லை.

தடாகத்தில் குதித்த மருத்துவ மாணவருக்கு நேர்ந்த சோகம்... தடைசெய்யப்பட்ட வனப் பகுதியில் விபரீதம்!

கேரளாவைச் சேர்ந்த ஜோயல் என்ற மாணவர் தடாகத்தில் குதித்திருக்கிறார். சரிவர நீச்சல் தெரியாத அவரால் தண்ணீருக்குள்ளிருந்து மேலே வர முடியவில்லை.

Published:Updated:
தடைசெய்யப்பட்ட வனப் பகுதியில் விபரீதம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருக்குறுங்குடியில் திருமலைநம்பி கோயில் அமைந்திருக்கிறது. சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். மழைக் காலங்களில் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கோயிலுக்குச் செல்ல முடியாத அளவுக்குக் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில்
திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில்

தற்போது நம்பி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் நெல்லை மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்களும், ஆறு மாணவிகளும் மலைக் கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் மருத்துவ மாணவர்கள் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கும் நம்பியாறு வழியாக நீர்வழித்தடத்தில் மலைமீது ஏறிச் சென்றிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆற்றிலுள்ள தடாகத்தில் மருத்துவ மாணவர்கள் குளித்திருக்கின்றனர். அப்போது மாணவர்கள் ஆர்வத்துடன் பாறைகளின் மீதேறி நின்று தடாகத்தில் குளித்து மகிழ்ந்தார்கள். அவர்களோடு சென்றிருந்த கேரளாவைச் சேர்ந்த ஜோயல் என்ற மாணவரும் தடாகத்தில் குதித்திருக்கிறார். சரிவர நீச்சல் தெரியாத அவரால் தண்ணீருக்குள்ளிருந்து மேலே வர முடியவில்லை.

மருத்துவ மாணவர் ஜோயல்
மருத்துவ மாணவர் ஜோயல்

நீண்ட நேரமாகியும் ஜோயல் நீருக்கு மேலே வராததால் பிற மாணவர்கள் தடாகத்தில் குதித்து அவரை மீட்கப் போராடியிருக்கின்றனர். ஆனால் அதற்குள் அவர் தடாகத்தின் உள்ளே மூழ்கிவிட்டார். அவரை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து முதலுதவி செய்தபோதிலும், அதிகமாகத் தண்ணீரைக் குடித்ததால் ஜோயல் உயிரிழந்துவிட்டார்.

இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் இணைந்து மாணவனின் உடலை கம்பில் துணி மூலம் கட்டி ஆற்றின் வழியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குக் கொண்டு வந்தார்கள். பின்னர் கோயிலின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொண்டுவரப்பட்டது.

தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் மாணவர்கள் சென்றது எப்படி என்பது பற்றி விசாரிக்கிறோம்
காவல்துறை

இது தொடர்பாக திருக்குறுங்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்றது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. உயிரிழந்த மருத்துவ மாணவர் ஜோயல் கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை ஜோஸ், கேரள மாநிலம் திருவனந்தபுரம் காவல்துறையில் போதைத் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி-யாகப் பணியாற்றிவருகிறார். உயிரிழந்த ஜோயல், அவர் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்திருக்கின்றனர்.