Published:Updated:

திண்டிவனம்: குளிர்பானம் அருந்திய பள்ளி சிறுவன் பேருந்தில் உயிரிழப்பு! - ஃபுட் பாய்சன் காரணமா?

உயிரிழப்பு ( சித்தரிப்புப் படம் )

குளிர்பானம் எடுத்துக்கொண்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த சிறுவன், பேருந்தில் திண்டிவனம் அருகே வந்துக் கொண்டிருந்த போது பெரும் மூச்சு விட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டிவனம்: குளிர்பானம் அருந்திய பள்ளி சிறுவன் பேருந்தில் உயிரிழப்பு! - ஃபுட் பாய்சன் காரணமா?

குளிர்பானம் எடுத்துக்கொண்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த சிறுவன், பேருந்தில் திண்டிவனம் அருகே வந்துக் கொண்டிருந்த போது பெரும் மூச்சு விட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Published:Updated:
உயிரிழப்பு ( சித்தரிப்புப் படம் )

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபஸ்டீன் ராஜ். இவரின் 14 வயது மகன் மர்க்கஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருவிழாவிற்கு குடும்பத்தாருடன் அண்மையில் சென்றிருந்த ஜெபஸ்டீன் ராஜ், நேற்று இரவு உணவு அருந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு குடும்பத்துடன் புறப்பட்டுள்ளார். ராஜபாளையத்திலிருந்து - சென்னை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது, மர்க்கஸ் சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது.

அரசு பேருந்து
அரசு பேருந்து
மாதிரி படம்

இந்த நிலையில், அழகாபுரி எனும் இடத்தில் பேருந்து நின்றபோது, அங்கிருந்த கடை ஒன்றில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றை வாங்கிய ஜெபஸ்டின் ராஜின் மனைவி, தமது மகன் மார்க்கஸூக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை உட்கொண்ட சிறுவன் மார்க்கஸ், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். குடும்பத்தார் அவருக்கு தண்ணீர் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். பின், விக்கிரவாண்டி அருகே எழுப்பிய போது சுய நினைவின்றி இருந்ததாக கூறப்படும் சிறுவனை, அதிகாலை 4 மணி அளவில் திண்டிவனம் பேருந்து நிறுத்தம் அருகே மீண்டும் எழுப்பியுள்ளனர். அப்போது பெரும் மூச்சு விட்ட சிறுவன், எவ்வித அசைவும் இன்றி இருந்ததாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பேருந்திலேயே கதறி அழுதுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் மார்க்கஸை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனை சோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனை - திண்டிவனம்
அரசு மருத்துவமனை - திண்டிவனம்

இதனை கேட்ட பெற்றோர், கதறி அழுதுள்ளனர். குளிர்பானம் சாப்பிட்ட சிறுவனுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருக்காலாமா? அல்லது புரை ஏறியதால் இறந்திருக்கலாமா? உள்ளிட்ட சந்தேக கோணத்தில் விசாரணையை மேற்கொண்ட திண்டிவனம் போலீஸார், இந்தச் சம்பவம் குறித்து 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சிறுவனின் பிரேத உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.