Published:Updated:

`உங்கள் அன்புக்கு நன்றி!’ - கேரள `டிக் டாக்' புகழ் சிறுமி மர்ம நோயால் மரணம்

கலிலுல்லா.ச

டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமடைந்த கேரளாவைச்சேர்ந்த சிறுமி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

ஆருணி
ஆருணி

டிக்டாக் செயலி பயன்படுத்துபவர்களுக்கு ஆருணியைத் தெரிந்திருக்கலாம். கேரளாவைச் சேர்ந்த 9 வயது சிறுமியான ஆருணியின் வீடியோக்கள் டிக்டாக்கில் பிரபலம். மலையாள பாடல் பிண்ணி வீடியோக்களில் ஆருணி கொடுக்கும் முகபாவனைகளுக்கு ரசிகர்கள் ஏராளம். `இனி அவர் அந்த வீடியோவிலும் தோன்றமாட்டார்’ என்பது தான் காலம் அவளுக்கு வைத்த செக். கடந்த சில மாதங்களாக கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார் ஆருணி.

ஆருணி
ஆருணி

திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலைமை கையை மீறிப்போக சிகிச்சையிலிருக்கும்போதே, ஆருணியின் உயிர் பிரிந்தது. என்ன நோய் என்றே தெரியாமல் உயிரிழந்துவிட்டாள் அந்த 9 வயது சிறுமி. அவருக்கு மூளையில் ஏதோ ஒரு பிரச்னை இருந்ததாகவும், அதை மருத்துவர்களால் கண்டறியமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

சௌதி அரேபியாவில் கடந்தாண்டுதான், அவரது தந்தை உயிரிழந்தார். 4ம் வகுப்புப் படித்துவந்த அவருக்கு டிக்டாக்கில் 15,000-த்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.

பயோவில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்
பயோவில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்

ஆருணியின் மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிக்டாக்கில் இருக்கும் ஆருணியின் பயோவில் இப்படிக் குறிபிடப்பட்டிருக்கிறது. `உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்'.