Published:Updated:

தமிழன்,ஜோக்கர் படங்களுக்கு இன்ஸ்பிரேஷன்! - சமூகப்போராளி செந்தமிழ்க்கிழார் மரணம்

தன் இறுதிநாள் வரை சமரசமில்லாமல் போராடிய சமூகப்போராளி அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

செந்தமிழ்க்கிழார்
செந்தமிழ்க்கிழார்

சமூக ஆர்வலரும், செயற்பாட்டாளருமான செந்தமிழ்க்கிழார், உடலநலக்குறைவால் இன்று காலை சென்னையில் காலமானார். இவருக்கு வயது 70. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை பூர்விகமாகக் கொண்டவர் இவர்.

செந்தமிழ்க்கிழார்
செந்தமிழ்க்கிழார்

இளம்வயதில் பொய்யான மோசடி புகாருக்கு உள்ளாக்கப்பட்டு, வழக்கறிஞர் ஒருவரால், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் போராட்டக்களத்துக்கு வந்தார். தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராடத் தொடங்கினார். இறுதிநாள் வரை சமரசமில்லாமல் போராடி வந்தவர். உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னை அய்யப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.

Vikatan

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் இந்திய தண்டனைச் சட்டம் முதல் குற்றவியல் சட்டங்கள் வரை அனைத்தும் அவருக்கு அத்துப்படி. `நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்', 'பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள்' உள்ளிட்ட பல சட்ட விழிப்புணர்வு புத்தகங்களையும் எழுதியுள்ளார். 'மக்கள் காவல் நிலையம்', 'மக்கள் நீதிமன்றம்' என்ற பெயரில் தனியாக அமைப்புகளை உருவாக்கி, காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் சவால் விட்டவர்.

செந்தமிழ்க்கிழார்
செந்தமிழ்க்கிழார்

மோசடியாளர், கட்டப் பஞ்சாயத்து செய்பவர் என காவல்துறை தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டன. இருப்பினும், எளிய மக்களுக்கான பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடியதால், தங்களுக்காகக் குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மக்கள் இவரைப் பார்த்தனர். இவரின் வாழ்க்கையைத் தழுவியே, தமிழன், ஜோக்கர், மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.