Published:Updated:

‘‘பயம் தரும் தனித்தீவு வாழ்க்கை!’’

சுஷாந்த் சிங்
பிரீமியம் ஸ்டோரி
சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங் தற்கொலை... அனுஷ்கா ஷர்மா அதிர்ச்சி

‘‘பயம் தரும் தனித்தீவு வாழ்க்கை!’’

சுஷாந்த் சிங் தற்கொலை... அனுஷ்கா ஷர்மா அதிர்ச்சி

Published:Updated:
சுஷாந்த் சிங்
பிரீமியம் ஸ்டோரி
சுஷாந்த் சிங்
பாலிவுட் மட்டுமல்ல, இந்தியாவே நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைச் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘MS Dhoni: The Untold story’-யில் உடல்மொழி, நடை உடை பாவனை என அனைத்திலும் தோனியாகவே வாழ்ந்து அசத்தியிருப்பார் சுஷாந்த்.

2013-ல் ‘கய் போ சே’ படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார் சுஷாந்த். அதற்கு முன்னர் சின்னத்திரையில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். முதல் படத்தில் எல்லோர் மனதையும் சுண்டியிழுக்கும் நடிப்பின் வசீகரித்ததால் பாலிவுட் உலகம் அவரை வாரி அணைத்துக்கொண்டது.

குறுகியகாலத்தில் விதவிதமான கேரக்டர்களில் மிளிர ஆரம்பித்தார். உதாரணமாக, சம்பல் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கொள்ளையர்களைப் பற்றிய ‘சோஞ்சிரியா’ திரைப்படம் அதுவரை அவர்கள் மீதிருந்த பார்வையைத் தவிடுபொடியாக்கியது. படத்தில் சுஷாந்த் ஏற்ற `லக்னா சிங் பாத்திரம், இவர் எல்லாவிதமான ரோல்களிலும் ஜொலிப்பார் என்ற முத்திரையைக் கொடுத்தது.

பள்ளி நாள்களில் சுஷாந்த் ஒரு ஆல் ரவுண்டர். நல்ல படிப்பாளி, திறமையான ஸ்போர்ட்ஸ்மேன், நாடக நடிகர். பீகாரிலிருந்து டெல்லிக்கு மெரிட்டில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வந்தவர். இயற்பியலில் ‘ஒலிம்பியாட்’ பட்டம் பெற்றவர். டி.வி சீரியல்களில் நடிக்க மும்பைக்கு வந்தவருக்கு ஏறுமுகம் மட்டுமே!

மும்பையில் அவர் தற்கொலை செய்துகொண்ட பாந்த்ரா போஸ் பளி ஹில் அப்பார்ட்மென்ட்டின் 6-வது மாடி வீட்டில் தனியாகவே வசித்துவந்திருக்கிறார். அவ்வப்போது சகோதரி மட்டும் போய்ப் பார்த்து வருவார். குடும்பம் இன்னும் பாட்னாவில்தான் வசிக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிஸியான நடிப்புக்கு கொரோனா ஊரடங்கு கொடுத்த தனிமை, காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி (கடந்த வாரம் இவரின் முன்னாள் பெண் தோழி அங்கிதாவுக்கு வேறொருவருடன் நிச்சயம் ஆகியிருக்கிறது), சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட இவரின் முன்னாள் மேலாளர் திஷா சலியான்... எனப் பல விஷயங்கள் தந்த மன அழுத்தத்தால் இவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது அறையில் கைப்பற்றப்பட்ட மன அழுத்தத்துக்கான மாத்திரைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

‘பிகே’வில் இவருக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா ஷர்மா, ‘என்ன மாதிரியான வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். இப்படியொரு பிரச்னையை பழகிய யாருடனும் ஷேர் செய்ய முடியாத அளவுக்கு தனித்தீவாய் இருக்கும் நம் வாழ்க்கைமுறை மீது பயம் வருகிறது!’ என்று அதிர்ச்சியோடு சொல்லியிருக்கிறார்.

கடைசியாக சுஷாந்த் நடித்த ‘சிச்சோரே’ படத்தில் அவர் ஏற்றிருந்தது தற்கொலைக்கு எதிரான பாத்திரம். ‘தோல்வி என்பது முயற்சி செய்யாமல் இருப்பது... எந்தத் தோல்விக்கும் தற்கொலை தீர்வல்ல!’ என்று படத்தில் வசனம் பேசியவர், அதற்கு எதிரான முடிவைத் தன் வாழ்வில் தேடிக்கொண்டதுதான் பெரும் சோகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism