Published:Updated:

நிவாரணப் பொருள்களை வீடு வீடாகக் கொடுத்த சென்னை அ.தி.மு.க நிர்வாகி - கொரோனாவால் உயிரிழந்த சோகம்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னையில் நிவாரணப் பொருள்களை வீடு, வீடாகக் கொடுத்து வந்த அமைச்சருக்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகிக்கு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட இடங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. 4-வது தடவையாகத் தளர்வுகளுடன் அமல்படுத்த ஊரடங்கால் மக்கள் இயல்பு நிலைமைக்குத் திரும்பி வருகின்றனர்.

கொரோனா
கொரோனா
அமைச்சருக்கு மிகவும் வேண்டப்பட்ட அந்த நிர்வாகி, கட்சிக்காகக் கடுமையாக உழைத்துவந்தார். அவரின் சகோதரி, உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்தவர். ஊரடங்கையொட்டி நலத்திட்ட உதவிகளைச் செய்துவந்த அ.தி.மு.க நிர்வாகிக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது எனத் தெரியவில்லை.
அ.தி.மு.க-வினர்

ஊரடங்கால் வருமானமின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தன்னார்வலர்களும் அரசியல் கட்சிகளும் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகளை வழங்கி வருகின்றனர். அ.தி.மு.க சார்பில் வடசென்னையில் உதவிகள் வழங்கப்பட்டன. வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 48 வயதான அ.தி.மு.க நிர்வாகி, வீடு வீடாகச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்தார். இவர், மூத்த அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர் என்று அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் அ,தி.மு.க நிர்வாகிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று அதிகாலை அவரின் உடல்நலம் மோசமானது. பின்னர் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

`சிம்பிளாக பழகுவார்.. நல்ல மனிதர்!' -கொரோனாவால் உயிரிழந்த பாளையங்கோட்டை தி.மு.க எம்.எல்.ஏ மகன்
கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
representational image

கொரோனாவால் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்ததும் மூத்த அமைச்சர் தரப்பிலிருந்து அ.தி.மு.க நிர்வாகியின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லப்பட்டது. மருத்துவமனையிலிருந்து அ.தி.மு.க நிர்வாகியின் சடலம், மூலக்கொத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி அ.தி.மு.க நிர்வாகியின் சடலம் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து அ.தி.மு.க-வினர் கூறுகையில், ``அமைச்சருக்கு மிகவும் வேண்டப்பட்ட அந்த நிர்வாகி, கட்சிக்காகக் கடுமையாக உழைத்து வந்தார். அவரின் சகோதரி, உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்தவர். ஊரடங்கையொட்டி நலத்திட்ட உதவிகளை செய்துவந்த அ.தி.மு.க நிர்வாகிக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது எனத் தெரியவில்லை. தற்போது அவரின் குடும்பத்தினரும் அவரோடு தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றனர்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகி கொரேனாவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரின் சடலத்தை பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளோம். அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகி வசிக்கும் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் அ.தி.மு.க நிர்வாகி குடியிருந்த பகுதியை சீல் வைத்து கண்காணித்து வருகிறோம். விரைவில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு