Published:Updated:

சென்னை: இ-பாஸ் கிடைக்காமல் தவித்த மனைவி, மகள்! - தனிமையால் தற்கொலை முடிவெடுத்த முதியவர்

தற்கொலை
தற்கொலை ( Representational Image )

சென்னை ஆதம்பாக்கத்தில் மனைவி, மகளைப் பிரிந்து 6 மாதங்கள் தனியாக வாழ்ந்த முதியவர், மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோட்டில் உள்ள சாந்தி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில் காதம்பரி பிளாக் ஏ 31 என்ற வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. அதனால் இந்தத் தகவலை ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் ரேணுகா, மலர் ஆகியோர் தாங்கள் வேலை பார்க்கும் நிம்மதி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

இதையடுத்து அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் விஸ்வநாதன், கோவிலம்பாக்கம் கொளத்தூரைச் சேர்ந்த பிளம்பர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றனர் அங்குள்ள அசோசியேஷன் நிர்வாகிகளிடம் விவரத்தைக் கூறினர். வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. அதனால் கதவை உடைத்து உள்ளே அனைவரும் சென்றனர்.

தனிமை

அப்போது வீட்டின் உரிமையாளர் சந்திரமோகன் (72) ஹாலில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சந்திரமோகனின் சடலத்தை மீட்டு பிரேத பரசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஸ்வநாதன் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் எஸ்.ஐ முருகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

சென்னை: மனைவி மீது 73 வயது கணவருக்கு சந்தேகம்! -அதிர்ச்சி கொடுத்த கொலை, தற்கொலை

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``சந்திரமோகனின் மனைவி வசந்திதேவி, இந்தத் தம்பதியின் மகள் ஷில்பா. இவர்கள் 3 பேரும் இந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர். வசந்திதேவியின் அக்கா மகள் பெங்களூரில் குடியிருக்கிறார். அவரைப் பார்க்க கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருக்கு வசந்திதேவி, ஷில்பா ஆகியோர் சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக அவர்களால் சென்னைக்குத் திரும்பி வரமுடியவில்லை.

தற்கொலை

அதனால், பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 6 மாதங்கள் சந்திரமோகன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். முதுமை, தனிமை ஆகியவற்றால் மனமுடைந்துள்ளார். மனைவி, மகளிடம் வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். உடனே அவர்கள் பெங்களூருலிருந்து சென்னை வர இ-பாஸுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. மனைவி, மகளைப் பிரிந்த சூழலில் சந்திரமோகன் தறகொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

திருநங்கை தற்கொலை
திருநங்கை தற்கொலை
மாதிரிப் படம்

அதனால், வீட்டின் ஹாலில் மின்விசிறியில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். அவரின் மரணம் குறித்து வசந்திதேவியிடம் கூறியபோது கடந்த 9-ம் தேதி என்னிடம் போனில் பேசினார். எதற்காக இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என்று கண்ணீர்மல்க கூறினார்.

சந்திரமோகன், தற்கொலை செய்து சில நாள்களாகியதால் அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. வசந்திதேவி, ஷில்பா ஆகியோர் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு