Published:Updated:

சென்னை: நள்ளிரவில் பாத்ரூம் சென்ற சிறுவன் - உயிரைப் பறித்த மின்விசிறி!

சிறுவன் தருணேஷ்வரன்

சென்னையில் பாத்ரூம் சென்றுவிட்டு, ஈரக்கையால் மின்விசிறியின் சுவிட்ச்சைத் தொட்ட சிறுவன்மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தான்.

சென்னை: நள்ளிரவில் பாத்ரூம் சென்ற சிறுவன் - உயிரைப் பறித்த மின்விசிறி!

சென்னையில் பாத்ரூம் சென்றுவிட்டு, ஈரக்கையால் மின்விசிறியின் சுவிட்ச்சைத் தொட்ட சிறுவன்மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தான்.

Published:Updated:
சிறுவன் தருணேஷ்வரன்

சென்னை சூளைமேடு, ராதாகிருஷ்ணன் நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் தக்ஷணாமூர்த்தி. இவர் பெருமாள் கோயில் தெருவில் டூவிலர் மெக்கானிக் கடை நடத்திவருகிறார். இவரின் மகன் தருணேஷ்வரன் (4). நேற்றிரவு ராதாகிருஷ்ணன் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது தருணேஷ்வரன், பாத்ரூம் செல்ல வேண்டும் என தக்ஷணாமூர்த்தியை எழுப்பியுள்ளான். உடனே அவரும் மகனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தருணேஷ்வரனை, அம்மாவிடம் சென்று படுத்துக்கொள் என்று கூறிய தக்ஷணாமூர்த்தி, வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது, சிறுவன் தருணேஷ்வரனின் அலறல் சத்தம் கேட்டு தக்ஷணாமூர்த்தியும் அவரின் மனைவியும் ஹாலுக்கு வந்துள்ளனர்.

சுவிட்ச் போர்டு
சுவிட்ச் போர்டு

அப்போது பேச்சு மூச்சில்லாமல் தருணேஷ்வரன் கிடந்துள்ளார். அவரின் அருகில் டேபிள் ஃபேன் கிடந்தது. அதிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து தருணேஷ்வரனை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறினர். இதையடுத்து தருணேஷ்வரனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனைப் பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் தருணேஷ்வரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். அதைக் கேட்டு அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து சூளைமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தருணேஷ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தருணேஷ்வரனின் பெற்றோரிடம் போலீஸார் விசாரித்தனர்.

உயிரைப்பறித்த மின்விசிறி
உயிரைப்பறித்த மின்விசிறி

இது குறித்து சூளைமேடு போலீஸார் கூறுகையில், ``நேற்றிரவு பாத்ரூமுக்கு தருணேஷ்வரன் சென்றிருக்கிறான். பின்னர் அவன் ஈரக்கையால் டேபிள் ஃபேனின் சுவிட்ச்சை தொட்டிருக்கிறான். அதனால், அவன்மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளான்’’ என்றனர்.

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சூளைமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.