Election bannerElection banner
Published:Updated:

``நள்ளிரவில் குரைத்த நாய்; கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து பலி" - சென்னையில் சோகம்

வீடு
வீடு

நள்ளிரவில் நாய் குரைத்ததால் வீட்டை விட்டு வெளியில் வந்த கணவன், மனைவி பாம்பைத் தேடியுள்ளனர். பின்னர் கழிவறைக்குச் சென்ற மனைவி, பாம்பு கடித்து பலியானார்.

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித்தொழிலாளி. இவரின் மனைவி ஆதிலட்சுமி. இந்தத் தம்பதிக்கு சித்ரா, சிந்துதேவி என 2 மகள்கள். குடும்பத்தினருடன் சுந்தர்ராஜன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அதனால் சுந்தர்ராஜனும் ஆதிலட்சுமியும் கண்விழித்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்தனர்.

``நள்ளிரவில் குரைத்த நாய்; கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து பலி" - சென்னையில் சோகம்
`தூய்மைப் பணியாளரைக் கடித்த பாம்பு!' - கர்ப்பிணிப் பெண்களை அலறவிடும் தஞ்சை அரசு மருத்துவமனை

வீட்டுக்குள் சென்ற ஆதிலட்சுமி, கழிவறைக்குச் சென்றார். அப்போது ஆதிலட்சுமி அலறினார். அவரின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சுந்தர்ராஜன் வந்தார். ஆதிலட்சுமியின் காலில் பாம்பு சுற்றியிருந்தது. அதைப்பார்த்த சுந்தர்ராஜன் அதிர்ச்சியடைந்தார். உடனே சுந்தர்ராஜன், பாம்பு, பாம்பு என சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வடமாநில இளைஞர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

இந்தச்சமயத்தில் ஆதிலட்சுமியின் காலில் சுற்றியிருந்த பாம்பு, அங்கிருந்து நைசாக சென்றது. அப்போது ஆதிலட்சுமியின் காலில் பாம்பு கடித்தது. பாம்பு கடித்ததும் ஆதிலட்சுமி மீண்டும் சத்தம் போட்டார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

என்னுடைய மனைவிக்கு பாம்பு கடித்ததும் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்கலாம். சரியான நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வராததால் என் மனைவியை இழந்து தவிக்கிறேன்.
சுந்தர்ராஜன்
``நள்ளிரவில் குரைத்த நாய்; கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து பலி" - சென்னையில் சோகம்

இதையடுத்து கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் வீரக்குமார் மற்றும் போலீஸார் ஆட்டோ மூலம் ஆதிலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். அதனால் சுந்தர்ராஜன் கதறி அழுதார். பின்னர் ஆதிலட்சுமியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுந்தர்ராஜன் கூறுகையில், ``சென்னை கண்ணகி நகர் பகுதி முட்புதர்கள் மண்டிகிடக்கின்றன. அதனால்தான் அடிக்கடி விஷ சந்துக்கள் வருவது வாடிக்கையாகிவிட்டன. என்னுடைய மனைவிக்கு பாம்பு கடித்ததும் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்கலாம். சரியான நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வராததால் என் மனைவியை இழந்து தவிக்கிறேன். இதுபோன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் ஏற்படக் கூடாது" என்றார் கண்ணீருடன்

``நள்ளிரவில் குரைத்த நாய்; கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து பலி" - சென்னையில் சோகம்

போலீஸார் கூறுகையில், ``ஆம்புலன்ஸ் வர தாமதமானதும் ஆட்டோ மூலம் ஆதிலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நடுவழியில் ஆம்புலன்ஸ் வந்தது. இருப்பினும் அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றும் ஆதிலட்சுமியைக் காப்பாற்ற முடியவில்லை" என்றனர்.

கண்ணகிநகர் பகுதி மக்கள் கூறுகையில், ``ஏராளமான மக்கள் குடியிருக்கும் இந்தப்பகுதியில் போதிய மருத்துவ வசதியில்லை. கண்ணகிநகர் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு இருந்தும் போதிய மருத்துவர்கள் இல்லை. அதனால்தான் ஆதிலட்சுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

``நள்ளிரவில் குரைத்த நாய்; கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து பலி" - சென்னையில் சோகம்

மேலும் முகவரி தெரியாமல் ஆம்புலன்ஸ் வரவும் காலதாமதமானதும் ஆதிலட்சுமி மரணத்துக்கு இன்னொரு முக்கிய காரணம். எனவே, அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி என்று கூறியதும் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் மற்றும் போலீஸார் உடனடியாக உதவி செய்தனர்" என்றனர்.

கழிவறைக்குச் சென்ற பெண், நள்ளிரவில் பாம்பு கடித்து பலியான சம்பவம் கண்ணகிநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு