Published:Updated:

வாரம் ஒரு டிரக்கிங் - கோவையில் யானை மிதித்துப் பலியான பெண்!

புவேனஸ்வரி
புவேனஸ்வரி

கோவையில் வனத்துறைக்குள் அனுமதியின்றி டிரக்கிங் சென்ற பெண், யானை மிதித்துப் பலியானார்.

கோவை கணபதி மாநகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி, சங்கரா மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

பாலமலை
பாலமலை

விடுமுறை நாளான நேற்று, பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட்டுக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக குஞ்சூர்பதி டு மாங்குழி செல்லும் சாலையில் வனத்துறை அனுமதி பெறாமல் பிரசாந்த், புவனேஸ்வரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

வனப்பகுதியில் எந்தவித அனுமதியுமின்றி நண்பர்களுடன் டிரக்கிங் சென்றுள்ளனர். அவர்கள், வனப்பகுதிக்குள் நடந்து கொண்டிருந்தபோது, ஒற்றை ஆண் காட்டு யானை எதிரில் வந்துள்ளது. உடனடியாக, அனைவரும் தப்பியோட முயற்சி செய்துள்ளனர்.

யானை
யானை

புவனேஸ்வரி அருகில் இருந்த ஒரு புதரில் ஒளிந்துள்ளார். இதையடுத்து, புவனேஸ்வரியைத் துரத்திச் சென்ற யானை, அவரை துதிக்கையில் தூக்கி வீசி குத்திக் கொன்றுள்ளது.

இதைப் பார்த்த புவனேஸ்வரியின் கணவர் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் கதறினார்கள். அவர்கள் சத்தம் எழுப்பவே, யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதையடுத்து, பிரசாந்த் வனத்துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

Representational Image
Representational Image

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறை, புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சம்பவத்தில் உயிரிழந்த புவனேஸ்வரி, அவரது கணவர் பிரசாந்த் மற்றும் நண்பர்கள் எந்த அனுமதியும் பெறாமல் வனத்துக்குள் அடிக்கடி நடைப்பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. குறிப்பாக, வாரத்துக்கு ஒரு வனப்பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு டிரக்கிங் சென்று வந்துள்ளனர்.

புவனேஸ்வரி
புவனேஸ்வரி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குரங்கணியில் அனுமதியற்ற டிரக்கிங்கின்போது, காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். அதேபோல, தற்போது அனுமதியற்ற டிரக்கிங் கோவையில் ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது.

பின் செல்ல