Published:Updated:

கொரோனா: 19 நாள்கள் சிகிச்சை! - கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் காலமானார்

வசந்தகுமார் எம்.பி
வசந்தகுமார் எம்.பி ( தே.அசோக்குமார் )

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

காங்கிரஸ் எம்.பி-யும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் கொரோனா அறிகுறிகளுடன் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வசந்தகுமார் எம்.பி
வசந்தகுமார் எம்.பி
தே.அசோக்குமார்

இந்தநிலையில், இன்று காலை அவரது உடல்நிலை கடுமையாக பாதிப்படைந்ததாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட குறிப்பில், ``கொரோனா தொற்றுடன் கடந்த 10-ம் தேதி அனுமதிக்கப்பட்ட வசந்தகுமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சையளித்துவருகிறது. கோவிட் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Corona: கடுமையான நிமோனியா! - வசந்தகுமார் எம்.பி உடல்நிலை கவலைக்கிடம்

காங்கிரஸ் கட்சி இரங்கல்!

காங்கிரஸ் கட்சி இரங்கல்
காங்கிரஸ் கட்சி இரங்கல்

``வசந்தகுமார் எம்.பி மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தொண்டராக இறுதிவரை வாழ்ந்த அவர், மக்களின் உண்மையாக தலைவராகவும் நேசிக்கப்படக் கூடிய எம்.பியாகவும் இருந்தவர். காங்கிரஸ் கட்சிக்கும் தொண்டர்களுக்கு அவரது மறைவு பேரிழப்பாகும். இந்தக் கடினமான சூழலில் அவரது குடும்பத்தினருடன் காங்கிரஸ் கட்சி ஆறுதலாகத் துணைநிற்கும்'' என்று காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு