Published:Updated:

`மரணம் குறித்த கனவு கொடுமையானது; கடும் மன அழுத்தம்?’- விபரீத முடிவெடுத்த 25 வயது டிவி நடிகை

நடிகை பிரெக்‌ஷா மேத்தா
நடிகை பிரெக்‌ஷா மேத்தா ( Instagram )

கிரைம் பாட்ரோல் தொடரில் நடித்து புகழ்பெற்ற மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த நடிகை பிரெக்‌ஷா மேத்தா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான்காவது முறையாக இந்த ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சில நாள்களுக்கு அது நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், பல்வேறு தொழில்களும் முடங்கியிருக்கின்றன. தினக்கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நடிகை பிரெக்‌ஷா மேத்தா ஸ்டேட்டஸ்
நடிகை பிரெக்‌ஷா மேத்தா ஸ்டேட்டஸ்
Instagram

ஊரடங்கால் சினிமா, டிவி துறையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. ஊரடங்கால் வேலையின்றி பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். அவர்களில் வேலையில்லாமல் பணக் கஷ்டத்தில் இருந்த டிவி பிரபலம் மன்மீத் க்ரேவால் சமீபத்தில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், அதேபோன்றதொரு விபரீத முடிவை 25 வயது இளம் டிவி நடிகை ஒருவர் எடுத்திருக்கிறார்.

கிரைம் பாட்ரோல், மேரி துர்கா மற்றும் லால் இஷ்க் உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரெக்‌ஷா மேத்தா. மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரெக்‌ஷா, டிவி சீரியல்களில் நடிப்பதற்காக மும்பையில் குடியிருந்து வந்தார். மும்பையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்த சூழலில், 25 வயதான அவர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான இந்தூருக்குக் கடந்த மாதம் வந்திருக்கிறார். ஊரடங்கால் வேலையில்லாத சூழலில் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

நடிகை பிரெக்‌ஷா மேத்தா
நடிகை பிரெக்‌ஷா மேத்தா
Instagram

இந்த நிலையில், அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் சீரியல் நடிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து இந்தூரின் ஹிரா நகர் காவல்நிலைய அதிகாரி ராஜீவ் பதோரியா கூறுகையில்,``ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் அவர் இங்கே இருந்து வருகிறார். அவரது உடலை முதன்முதலாகப் பார்த்த அவரின் தந்தை, எங்களுக்குத் தகவல் அளித்தார். அவர் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

தந்தையின் உடல்நிலை; வேலை இழப்பு; மன அழுத்தம்! - மும்பையில் சீரியல் நடிகை தற்கொலை

பிரெக்‌ஷாவின் மரணம் சக நடிகர்களைக் கலங்கவைத்துள்ளது. இதுதொடர்பாக பிரெக்‌ஷாவுடன் நடித்தவரும் தோழியுமான ரிச்சா திவாரி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு, ``இந்தப் புன்னகைக்குப் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது. அது யாருக்கும் புரியாது.

Instagram இல் இந்த இடுகையை காட்டு

चेहरे की हंसी के पीछे ऎसा बहुत कुछ छुपा होता हैं जिसे हर कोई नहीं समझ सकता। प्रेक्षा का आखरी स्टेटस था-"सबसे बुरा होता हैं सपनों का मर जाना" हमें मेंटल हेल्थ के लिए उतना ही जागरूक होना होगा जितना कि हम फिजिकल हेल्थ के लिए होते हैं। हमारे "एम.पी.एस.डी." परिवार की एक सदस्य अब नहीं रही। #RIPPrekshaMehta #artist #TheatreFamily #mpsdfamily #rip #suicide #mentalhealth #prekshamehta #preksha #prekshamehtasuicide #mentalhealthawareness #depration #anxiety #actress #tvartist #theatreartist #mpsd #theatre #mumbai #indore

அன்று Richa Tiwari இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@richatiwari309)

`எங்க குடும்பத்துக்கு என்னதான் சாபக்கேடோ?' - `திடீர்' மரணம் அடைந்த நடிகை வாணிஸ்ரீயின் மகன்

`உங்கள் மரணம் குறித்து கனவு காண்பதைவிட பெரிய கொடுமை எதுவுமில்லை’ என்று பிரெக்‌ஷா இறுதியாக ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். உடல்நலனில் நாம் அக்கறை காட்டுவதுபோல மனநலனில் நான் அக்கறை காட்ட வேண்டும். எங்கள் எம்.பி.எஸ்.டி குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டோம்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு