Published:Updated:

போலீஸ் டார்ச்சரால் முதியவர் தற்கொலை?! - நாம் தமிழர் கட்சியினர் புகார்

அர்ஜுணன்

குற்ற வழக்குக்காக தேடிச் சென்ற நபரின் தந்தையை காவல் ஆய்வாளர் அவமரியாதை செய்ததால், விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட முதியவர் உடலை வாங்க மறுத்து, நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

போலீஸ் டார்ச்சரால் முதியவர் தற்கொலை?! - நாம் தமிழர் கட்சியினர் புகார்

குற்ற வழக்குக்காக தேடிச் சென்ற நபரின் தந்தையை காவல் ஆய்வாளர் அவமரியாதை செய்ததால், விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட முதியவர் உடலை வாங்க மறுத்து, நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Published:Updated:
அர்ஜுணன்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள தேரிழந்தூர் சிவன்கோயில் வடக்குவீதியைச் சோந்தவர் அர்ஜுணன் (வயது 60). இவருக்கு ரத்தப் புற்றுநோய் உள்ளது, மாதத்துக்கு இரு முறை அடையாறு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுவருபவர். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஜெயவசந்தன் நாம் தமிழர் கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இளைய மகன் ஜெயசீலன் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.

அர்ஜுணன்
அர்ஜுணன்

ஜெயசீலனுக்கும், அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ள மணிகண்டன் என்பவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குத்தாலம் போலீஸார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இதற்டையே ஜெயசீலன், மணிகண்டன் கடையில் கள்ளநோட்டு வைத்துவிட்டுச் சென்றதாக வந்த புகாரின் பேரில் போலீஸார் ஜெயசீலன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜெயசீலனைப் பிடிப்பதற்காக சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர், ஜெயசீலன் எங்கே என்று கேட்டு தந்தை அர்ஜுணனைத் தகாத வார்த்தையால் பேசி, கையைப் பிடித்து இழுத்து அவமரியாதை செய்ததாகவும், இதனால் மனஉளச்சலில் இருந்த அர்ஜுணன் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு

பின்னர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அர்ஜுணன், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக் கிடங்கில் வைக்கப்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்த அர்ஜுணன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக இரு டி.எஸ்.பி-க்கள் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், ``அர்ஜுணன் தற்கொலை செய்துகொண்டது குறித்தும், ஜெயசீலன் வழக்குகளை வேறு காவல் ஆய்வாளர் மூலம் நேர்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு அர்ஜுணன் உடலை பெற்றுச் சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism