Published:Updated:

ஓ.ராஜா தோட்டத்தில் வேலை செய்தவர் மர்ம மரணம்?!- உறவினர்கள் சாலை மறியலால் தேனியில் திடீர் பரபரப்பு

சாலை மறியல்
News
சாலை மறியல்

தேனி மாவட்டம் போடேந்திரபுரம் கிராமத்தில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் தோட்டத்தில் வேலை செய்துவந்த ஒருவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் தேனி - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடேந்திரபுரம் கிராமத்தில் உள்ள ஓ.ராஜா தோட்டத்தில் முனியாண்டி என்பவர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. முனியாண்டி அதே போடேந்திரபுரம் கிராம வாசி. இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல, ஓ.ராஜா தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், மதியம், முனியாண்டியின் உறவினர் ஒருவரை தொடர்புகொண்டு பேசிய நபர், `தான் கானாவிலக்கு அரசு மருத்துவமனையிலிருந்து பேசுவதாகவும், முனியாண்டியின் உடல் இங்கு பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும்'' கூறியுள்ளார். இதனால், அதிச்சியடைந்த முனியாண்டியின் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓ.ராஜா தோட்டத்தில் வேலை செய்தவர் மர்ம மரணம்?!- உறவினர்கள் சாலை மறியலால் தேனியில் திடீர் பரபரப்பு

இது தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்டிருந்த முனியாண்டியின் உறவினர்கள் பேசும்போது, "சுமார் ஐந்து வருடங்களாக ஓ.ராஜாவின் தோட்டத்தில் முனியாண்டி வேலை செய்கிறார். பெரும்பாலும் அவரது தோட்டத்தில் உள்ள டிராக்டரை ஓட்டுவார். இன்று டிராக்டர் ஓட்டச் சென்றார். திடீரென முனியாண்டி இறந்துவிட்டதாகவும், அவரது உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லாமல், மருத்துவமனைக்கு உடலை கொண்டுசெல்ல என்ன காரணம்? இறந்த பின்னர் எங்களுக்குச் சொல்வதில் உள்ள மர்மம் என்ன? முனியாண்டிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இன்று அவர்களது குடும்பம் நிர்கதியாக உள்ளது. முனியாண்டியின் இறப்பிற்கு ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாதான் பொறுப்பு" என்றனர் கொதிப்போடு.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக ஓ.ராஜாவிடம் பேசியபோது, ``எனக்கு முனியாண்டி யார் என்றே தெரியாது. எனக்கும் முனியாண்டிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர் என்னுடைய சின்ன மாமனாரின் மகன் தோட்டத்தில் வேலை செய்கிறார். அவ்வளவுதான்" என்றார். இந்த விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.