Published:Updated:

‘உயிரை குடித்த லாட்டரி... பின்னணியில் தி.மு.க புள்ளிகள்?’

ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
ராதாகிருஷ்ணன்

நாலு வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஆளுங்க ஒண்ணு ரெண்டு பேர் லாட்டரிச்சீட்டு பிசினஸ் செஞ்சாங்க. ஆனா, எனக்கு அதுல ஈடுபாடு இல்லை

‘உயிரை குடித்த லாட்டரி... பின்னணியில் தி.மு.க புள்ளிகள்?’

நாலு வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஆளுங்க ஒண்ணு ரெண்டு பேர் லாட்டரிச்சீட்டு பிசினஸ் செஞ்சாங்க. ஆனா, எனக்கு அதுல ஈடுபாடு இல்லை

Published:Updated:
ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
ராதாகிருஷ்ணன்

‘‘தி.மு.க பிரமுகர் செந்தில்குமார் நடத்திவந்த லாட்டரி பிஸினஸில், 62 லட்ச ரூபாயை இழந்துவிட்டேன். எப்படியாவது இந்த லாட்டரித் தொழிலை ஒழித்துக்கட்டுங்கள்’’ என வீடியோ வழியே, அமைச்சர் முத்துசாமிக்கு கோரிக்கைவிடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் ஈரோட்டைச் சேர்ந்த நூல் வியாபாரி ராதாகிருஷ்ணன். தமிழகத்தையே பதைபதைக்கவைத்த இந்தத் தற்கொலை விவகாரத்தை ஈரோடு தி.மு.க-வின் முக்கியப்புள்ளிகள் மூடிமறைக்கப் பார்ப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து விஷயமறிந்த தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். “மு.க.ஸ்டாலின் முன்னிலையில, தி.மு.க-வுல சேர்ந்தவரு இந்த ‘லாட்டரி’ செந்தில்குமார். ஈரோடு தி.மு.க-வின் முக்கியப்புள்ளிகள் பலரும், அவருக்கு உறுதுணையாக இருக்காங்க. மாநகர முக்கிய நிர்வாகியை மாதந்தோறும் கவனிச்சிடுறாரு. கேபிள் வாரியப் புள்ளியோட சப்போர்ட்டும் இருக்குது. அதனாலதான் ராதாகிருஷ்ணனோட தற்கொலை வாக்குமூலம் வெளியான பிறகும்கூட கேஸை டம்மி பண்றாங்க. காசுதானுங்க எல்லாமே” என்று தலையில் அடித்துக்கொண்டனர்.

போலீஸார் தரப்பிலோ, “செந்திலுக்கு ஈரோட்டைத் தாண்டியும் லாட்டரி பிசினஸ் இருக்கு. செந்தில் மட்டுமில்லாம எம்.ஜி.நாத், எஸ்.வி.எல்.சிவா, சிங்கப்பூர் ராஜா, மாது என ஒரு பெரிய கேங்கே இங்கே லாட்டரி பிசினஸ் செஞ்சுக்கிட்டு இருக்கு. இவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு நாளைக்கு 50 லட்சத்துக்கு மேல பிசினஸ் செய்யறதா தகவல்!” என்று பகீர் கிளப்புகிறார்கள்.

சசிமோகன்
சசிமோகன்

புகார் குறித்து தி.மு.க பிரமுகர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டோம். “நாலு வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஆளுங்க ஒண்ணு ரெண்டு பேர் லாட்டரிச்சீட்டு பிசினஸ் செஞ்சாங்க. ஆனா, எனக்கு அதுல ஈடுபாடு இல்லை. நான் ரியல் எஸ்டேட், கேபிள் டி.வி பிசினஸ்னு வந்துட்டேன். இறந்துபோன ராதாகிருஷ்ணன் யாருன்னுகூட எனக்குத் தெரியாது. என் பேரை கெடுக்கணும்னு கட்சிக்காரங்க யாராவது இப்படிச் செஞ்சுருக்கலாம்’’ என்றார்.

ஈரோடு எஸ்.பி சசிமோகன் நம்மிடம், “செந்தில்குமார் மேல 2021 ஜூன்ல லாட்டரிச்சீட்டு விற்பனை சம்பந்தமாக வழக்கு போட்டிருக்கோம். யார் தப்பு செஞ்சாலும் குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

‘உயிரை குடித்த லாட்டரி... பின்னணியில் தி.மு.க புள்ளிகள்?’
செந்தில்குமார்
செந்தில்குமார்

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, “செந்தில் மனைவிக்கு கவுன்சிலர் சீட் கொடுக்கும்போதெல்லாம், லாட்டரி பிசினஸ்லருந்து விலகி வந்துட்டாரு. மற்றபடி செந்தில் மேல ஜூன் மாசம் லாட்டரி விற்பனை வழக்கு போட்டதைப் பத்தி எனக்குத் தெரியலைங்க. இந்த விவகாரத்தில் யார் தப்பு செய்திருந்தாலும் நிச்சயம் அவர்கள்மீது நடவடிக்கை உண்டு” என்றார்.

முழுதாக நனைந்த பிறகும் முக்காடு எதற்கு?!