Published:Updated:

பெல்ட்டால் உடலைப் பிணைத்து உயிரை மாய்த்துக்கொண்ட நண்பர்கள்! - ஊட்டி படகு இல்லத்தில் அதிர்ச்சி

ஊட்டி தேனிலவு படகு இல்லத்தில் சடலம்

ஊட்டியில் நண்பர்கள் இருவர் விசாரணைக்கு பயந்து உடல்களை பெல்ட்டால் பிணைத்து ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ட்டால் உடலைப் பிணைத்து உயிரை மாய்த்துக்கொண்ட நண்பர்கள்! - ஊட்டி படகு இல்லத்தில் அதிர்ச்சி

ஊட்டியில் நண்பர்கள் இருவர் விசாரணைக்கு பயந்து உடல்களை பெல்ட்டால் பிணைத்து ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ஊட்டி தேனிலவு படகு இல்லத்தில் சடலம்

நீலகிரி மாவட்டம் , ஊட்டி ஏரி தேனிலவு படகு இல்லம் பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதை ஊழியர்கள் பார்த்தனர். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து ஏரியில் மிதக்கும் சடலத்தை மீட்கும் பணியில் இறங்கினர். சடலத்தை மேலே தூக்கிப் போட்டதும் போலீஸார் மட்டும் அல்லாது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் நீரில் மிதந்த ஆண் சடலத்துடன் பெல்ட்டால் பிணைக்கப்பட்ட இன்னொரு ஆண் சடலமும் இருந்தது.

சேர்ந்தே இறந்த நண்பர்கள்
சேர்ந்தே இறந்த நண்பர்கள்

இரண்டு உடல்களும் ஒரே பெல்ட்டில் பிணைக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளன. இதைப் பார்த்த போலீஸார் குழப்பமடைந்தனர். பின்னர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்கினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ``நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தல் குருசடி பகுதியைச் சேர்ந்த கௌதம் (23). இவர் டாக்ஸி டிரைவர். இவரின் நண்பர் டேனிஷ் (23). இவரும் ஓட்டுநர். இருவரும் இணை பிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்கள் கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து இவர்களது பெற்றோர்கள் ஊட்டி ஜி1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களது புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தோம். இந்நிலையில் ஊட்டி தேனிலவு படகு இல்லம் பகுதியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை படகு இல்ல ஊழியர்கள் பார்த்து தகவல் கொடுத்தனர். அந்த உடலை மீட்டபோது, அந்த உடலில் இருந்து பேன்ட் பெல்ட்டுடன் இன்னொரு ஆண் உடலும் கட்டிய நிலையில் இருந்தது. இரு உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டதில், காணாமல் போன கௌதம் மற்றும் டேனியல் என்பது தெரியவந்தது. நண்பர்கள் இருவர் கூட்டாக இறந்து கிடந்தது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்'' என்றனர்.

இரு நாள்களுக்கு முன் இந்த வழக்கு தொடர்பாகக் காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸார் எச்சரித்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு பயந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளூர் மக்கள் கூறுகையில், ``இவர்கள் இருவர் மீதும் ஊட்டியில் உள்ள காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் முறையாக இவர்கள் இருவரும் ஆஜராகவில்லை, இரு நாள்களுக்கு முன் இந்த வழக்கு தொடர்பாகக் காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸார் எச்சரித்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு பயந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும்” என்றனர்.