Published:Updated:

காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!

காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!
பிரீமியம் ஸ்டோரி
காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!

குமரி எஸ்.நீலகண்டன்

காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!

குமரி எஸ்.நீலகண்டன்

Published:Updated:
காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!
பிரீமியம் ஸ்டோரி
காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!
காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!

“அப்பா இறந்து விட்டார்’’ என்று மே நான்காம் தேதி மாலை கல்யாணத் தின் இளைய மகள் நளினி தொலைபேசியில் என்னிடம் கூறியபோது, பத்து தினங் களுக்கு முன்பு தொலை பேசியில் என்னிடம் கேட்ட, “சார், எப்போ வீட்டிற்கு வர்றேள்?” என்ற காந்தியடி களின் கடைசி தனிச் செயலாளர் வி.கல்யாணம் அவர்களின் குரல்தான் மனதுக்குள் ஒலித்தது.

தமிழகம் பூர்வீகம் என்றாலும் பெற்றோரின் பணி நிமித்தம் சிம்லாவில் பிறந்தவர். டெல்லியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் படித்து, பாதுகாப்புத் துறையில் படைப்பணி சாராத பொதுப்பணியில் சேர்ந்தார். அலுவலகம் சார்ந்த பணிகளில் அவருக்கு ஆர்வம் இல்லை. உடல் உழைப்பு சார்ந்த பணியின் மீதிருந்த ஆர்வம் காரணமாக, காந்தியைப் பற்றி எதுவும் தெரியாமலேயே காந்தியின் மகனான தேவதாஸ் காந்தி மூலமாக வார்தாவிலுள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் சேர்ந்தார்.

காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!

காந்தி சிறையிலிருந்து வந்தபின் சுமார் நான்கு வருடங்கள் அவரோடு பயணித்தார். மகாத்மாவின் மரணம் வரை அவருடன் இருந்தார். காந்தி சுடப்பட்டபோது ஆறு அங்குலத் தொலைவில் காந்திக்கு அடுத்து இருந்தவர். காந்தி படுகொலையை நேரில் பார்த்தவர்களில் இதுவரை இருந்த கடைசி சாட்சி அவர். ஆசார்ய விநோபாவே, ஜெய பிரகாஷ் நாராயண், நேரு, மவுன்ட்பேட்டன், கான் அப்துல் கபார் கான், சர் சி.வி.இராமன் உட்பட அந்தக் காலத்தின் முக்கியமான ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பில் இருந்தார்.

காந்தியுடன் இருந்த காலத்திலிருந்து சமீப காலம் வரை சர்வமத பிரார்த்தனை யுடன்தான் அவரது நாள் தொடங்கும். அவரது குறிப்பேட்டில் ஐந்து தடவை ‘ராம ஜெயம்’ எழுதுவார். அடுத்து ஐந்து தடவை ‘அல்லாஹூ அக்பர்’ எழுதுவார். அடுத்து ஐந்து தடவை ‘ஜீசஸ் நெவர் பெயில்ஸ்’ எழுதுவார். பின் மற்ற வேலைகளைத் தொடர்வார்.

காலை நான்கு மணிக்கே எழுந்துவிடும் அவர், வெள்ளை அரைக்கால் சட்டையை அணிந்துகொண்டு வீட்டுப் படிகளில் தொடங்கி, படிக்கட்டின் பக்கச் சுவர், குடியிருப்பின் சுற்று வளாகம், பாரதிதாசன் சாலையில் வீட்டு முன்புள்ள நடைபாதையென எல்லாவற்றையும் ஒற்றைத் தூசில்லாமல் பெருக்கி விடுவார். வீட்டைச் சுற்றி அவர் வளர்க்கிற நூற்றுக்கணக்கான செடிகளின் வறண்ட இலைகளை உரமாக்குவார். ஒரு குழந்தைக்குப் பாலூட்டுவதுபோல செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.

காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!

ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது பருப்பு மற்றும் காய்கறிகளைப் போட்டுவிட்டு, இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அரிசி போட்டு குக்கரில் வைத்து அரை மணி நேரத்தில் அவரது சமையலை முடித்துவிடுவார். தயிரும் ஊறுகாயும் ஊடே இருக்க, அவரது மதியச் சாப்பாட்டின் சுவையே உன்னதமானது. வெண்ணெயுடன் பிரட், பப்பாளிப் பழம், தோசையென அவரது மற்ற நேர உணவுகளையும் வெகு குறுகிய கால அளவில் முடித்துவிடுவார்.

அவர் தயார் செய்கிற தேநீர் மிகவும் சுவையாக இருக்கும். வரும் விருந்தாளிகளுக்கு அவரே தேநீர் தயார் செய்து கொடுப்பார். பல தருணங்களில் நான் குடித்த தேநீர்க் கோப்பையைக் கழுவ அனுமதிக்க மாட்டார். அவர்தான் சுத்தம் செய்வார். மற்றவர்கள் கழுவும்போது அவரது சமையலறையின் சுற்றுச்சுவர்களில் தண்ணீர் தெறித்துவிடுமென்ற அச்சம்தான்.

தானாக முடி வெட்டிக்கொள்வார். தனக்கான ஒரு மாதத்திற்கான மொத்தச் செலவென்பது ஆயிரம் ரூபாய்க்கும் குறைவென்பார். இளம் வயதிலிருந்து தான் இருக்கும் இடத்தைப் பெருக்கி சுத்தமாக வைத்துக்கொள்வது அவரின் இயல்பு. அதே போலவே அரசியலையும் காந்திய நெறியில் அணுகினார். ‘‘அரசியல் பொறுப்பில் வரும் அமைச்சர்கள் ஊதியம் பெறக்கூடாது. அவர்கள் பொதுச்சேவைக்காக வருபவர்கள்’’ என்பார். ஒரு ஆளுமையை அவரது நல்ல செய்கைகளில் உச்சமாகப் புகழ்வார். அதே தருணத்தில் தவறு என்று அவருக்குப் படும்போது எந்த சமரசமுமின்றி விமர்சிப்பார். அதனாலேயே பலருடைய விமர்சனத்திற்கும் ஆளானார். ஆனால், அவருடைய ஆன்மாவானது ஒரு குழந்தையின் மிருதுவான மனதிற்கு ஒப்பானதாக இருந்தது.

“அப்பா கடுகு கடுகாய்ச் சேமித்து பூசணிக்காய் பூசணிக்காயாய்க் கொடுத்திடுவார்’’ என்று தன் அம்மா அடிக்கடி சொன்னதாக அவருடைய மூத்த மகள் மாலினி சொல்வார். அப்படித்தான் அவர் கோடிக்கணக்கான ரூபாயை பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி, செஞ்சிலுவைச் சங்கம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உட்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக அளித்தார். அந்த விவரங்களைத் தனிக் கோப்பாகவும் பராமரித்தார்.

காந்தி படுகொலையின் கடைசி சாட்சி!

‘‘மரணத்தைக் கண்டு பயப்படக் கூடாது. மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். அது வரும்வரை உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்’’ என்பார். கடந்த ஒரு வருடத்தில் பல தருணங்களில் தொலைபேசியில் குழந்தையாக என்னிடம் அழுதிருக்கிறார். ‘‘சார், கடவுளுக்குக் கருணையே இல்லை. என்னால் சும்மா படுத்துக் கிடக்க இயலவில்லை. ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். கைகால்களை அசைக்க இயலவில்லை. வலிக்கிறது. கண் பார்வை மிகவும் மங்கிவிட்டது. பார்க்க முடியவில்லை. வேலை செய்ய இயலவில்லை. எல்லாம் சரியாய் இருப்பவர்கள் வேலை செய்யாமல் பொழுதைப் போக்கிக்கொண்டு இருக்கிறார்கள். வேலை செய்யத் தயாராக இருக்கும் என்னை கடவுள் படுத்த படுக்கையாக்கி விட்டார்” என்று துயரத்துடன் கூறுவார்.

நூறு வயதை எட்டுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு தனது ஓட்டத்தை முடித்துக்கொண்டார் அந்த 99 வயது இளைஞர்.