Published:Updated:

`அதிபர் வேட்பாளர்; இதய பிரச்னை’ - அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் உயிரிழந்த ஐவரி பிரதமர்

ஐவரி பிரதமர் கோலிபாலி
ஐவரி பிரதமர் கோலிபாலி

ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த பிரதமர் கோலிபாலி உடல்நிலை மோசமானதால் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருப்பவர் 61 வயதான அமடோ கோன் கோலிபாலி (Amadou Gon Coulibaly). 2012-ம் ஆண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் பின்பு அதற்கான அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அப்போது முதல் தொடர்ந்து இருதய நோய் தொடர்பாகச் சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். கடந்த வருடம் மீண்டும் கடுமையான இருதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர் பிராஸிலேயே தங்கி சிகிச்சை பெற்று இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஐவரி திரும்பியுள்ளார்.

கோன் கோலிபாலி
கோன் கோலிபாலி

இதற்கிடையில் வரும் அக்டோபர் மாதம் ஐவரியில் அதிபர் பதவிக்காகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஆளும்கட்சி சார்பாக கோலிபாலிதான் அடுத்த அதிபர் பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போதைய அதிபரான அலசானி ஒட்டாரா, மூன்றாவது முறையாகத் தனக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை எனக் கூறி கோலிபாலியின் பெயரை பரிந்துரைத்திருந்தார்.

`பப்பாளிக்கு கொரோனா, சிகரெட் கடத்தல், மூலிகை மருந்து' - கொரோனா காலத்தில் ஆப்பிரிக்கா- ஒரு பார்வை!

இந்நிலையில், ஐவரியில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்துள்ளது. அதில் கலந்துகொள்ள வந்த கோலிபாலிக்கு சற்று உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. கூட்டத்தின்போது திடீரென அவரது உடல்நிலை மோசமானதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு பிரதமர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கோன் கோலிபாலியின் உயிரிழப்பை, அதிபர் அலசானியின் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

ஐவரி பிரதமர்
ஐவரி பிரதமர்

கோலிபாலியின் திடீர் உயிரிழப்பால் மொத்த ஐவரி நாடும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் உள்ளது. மேலும், இவரின் உயிரிழப்பு அங்கு நடக்கவுள்ள அதிபர் தேர்தல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரதமர் இறப்பு தொடர்பாக அதிபர் அலசானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``30 ஆண்டுகளாக அரசியலிலிருந்த என் உற்ற சகோதரர், என் மகன் தற்போது உயிரிழந்துவிட்டார். இது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது மொத்த ஐவரிக்கும் பெரும் இழப்பு. தன் நாட்டின் மீது மிகுந்த விசுவாசம், பக்தி, அன்பு கொண்ட ஒரு அரசியல்வாதிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு