Election bannerElection banner
Published:Updated:

கமுதி: 4 மாதக் குழந்தையுடன் விபரீத முடிவெடுத்த தாய்! - கொலையா என போலீஸ் விசாரணை

உயிரிழந்த குருதேவி
உயிரிழந்த குருதேவி ( உ.பாண்டி )

தன்மீதும், தனது நான்கு மாத கைக்குழந்தையின்மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பொன்முருகனும் அவர் குடும்பத்தினரும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமலேயே குருதேவி மற்றும் குழந்தையின் உடல்களை எரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

கமுதி அருகே குடும்பப் பிரச்னையால் மனம் வெறுத்த இளம்பெண் தனது நான்கு மாத கைக்குழந்தையுடன் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் குருதேவி.
தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் குருதேவி.
உ.பாண்டி

கமுதி அருகேயுள்ளது மேலமுடிமன்னார் கோட்டை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொன்முருகன் (27). தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவருக்கும் விருதுநகர் மாவட்டம் தொப்பலாக்கரையைச் சேர்ந்த குருதேவி (24) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருணம் நடைபெற்றது. இவர்களுக்கு மலைகீர்த்னன் என்ற நான்கு மாதமே ஆன ஆண் குழந்தை இருக்கிறது.

இந்தநிலையில் நேற்று, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையைத் தன்மீதும், தனது நான்கு மாதக் கைக்குழந்தையின் மீதும் ஊற்றி, தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பொன்முருகனும் அவர் குடும்பத்தினரும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமலேயே குருதேவி மற்றும் குழந்தையின் உடல்களை எரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கமுதி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

நான்கு மாதக் குழந்தை
நான்கு மாதக் குழந்தை
உ.பாண்டி

இதைத் தொடர்ந்து கீழமுடிமன்னார்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் செந்தூர்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் கமுதி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், குருதேவி தானாகவே தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்ட நிலையில் எரிக்கப்பட்டாரா என்பது குறித்து குருதேவியின் கணவர் பொன்முருகன், அவருடைய தந்தை முத்துசாமி, குருதேவியின் தாயார் ஜெயலட்சுமி ஆகியோரிடம் கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு