Published:Updated:

கரூர்: ஆடிவெள்ளி; தனியாக அகல்விளக்கு! - திடீர் தீயால் மாணவிக்கு நேர்ந்த துயரம்

முடக்குச்சாலை சமத்துவபுரம்
முடக்குச்சாலை சமத்துவபுரம்

தன் பங்குக்கு ஒரு அகல்விளக்கை தனியறையில் ஏற்றியிருக்கிறார். எண்ணெய் அதிகம் ஊற்றியதால், குபீரென்று பற்றிய அகல்விளக்கு தீ, அந்த இளப்பெண்ணின் ஆடையில் பற்றியிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் அணைப்பதற்குள், அந்தப் பெண்ணின் உடம்பில் மளமளவென்று பரவிய தீ, அவரது உடல் முழுவதும் பரவியது.

ஆடிவெள்ளியைக் கொண்டாடும்விதமாக வீட்டில் ஏற்றிய அகல்விளக்கு தீ உடையில் பட்டு எரிந்த மாணவி இறந்தச் சம்பவம், கரூர் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முடக்குச்சாலை சமத்துவபுரம்
முடக்குச்சாலை சமத்துவபுரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது மணவாசி. இந்த ஊராட்சியில் இருக்கும் முடக்குச்சாலை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்துசாமி. சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்துவருகிறார்.

கரூர்: சிறுவர்கள் சண்டை; தட்டிக் கேட்கப்போன தாய்! - கொலையில் முடிந்த சோகம்

இவரின் இளைய மகள் பொறியியல் இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்து, மூன்றாம் ஆண்டு படிப்பைத் தொடர காத்திருந்தார். இந்தச் சூழலில், கடந்த வெள்ளியன்று, இவரது வீட்டில் ஆடிவெள்ளியைக் கொண்டாடியிருக்கிறார்கள். வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக ஒன்றுகூடி, ஆடிவெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

முடக்குச்சாலை சமத்துவபுரம்
முடக்குச்சாலை சமத்துவபுரம்

அப்போது, மாரிமுத்துசாமியின் இளைய மகளும் தன் பங்குக்கு ஒரு அகல்விளக்கைத் தனியறையில் ஏற்றியிருக்கிறார். எண்ணெய் அதிகம் ஊற்றியதால், குபீரென்று பற்றிய அகல்விளக்கு தீ, அந்த இளப்பெண்ணின் உடையில் பற்றியிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் வந்து அணைப்பதற்குள், அந்தப் பெண்ணின் உடம்பில் மளமளவென்று பரவிய தீ, அவரது உடல் முழுவதும் பரவியது. தீயின் வெப்பம் தாங்க முடியாமல் அந்தப் பெண் அலறியிருக்கிறார்.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த இளம்பெண்ணை நெருங்கிய வீட்டில் உள்ளவர்கள் சாக்கை எடுத்து, அவரது உடலில் போர்த்தி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அகல்விளக்கு மூலம் பரவி பற்றிய தீ, அந்தப் பெண்ணின் உடலில் 75 சதவிகிதம் தீக்காயத்தை ஏற்படுத்தியிருந்தது. 108 ஆம்புலல்ன்ஸ் மூலம் உடனடியாக அந்தப் பெண்ணை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். ஆனால், மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சையளித்தும் பலனளிக்காமல், அந்தப் பெண் இறந்துபோனார்.

மாயனூர் காவல் நிலையம்
மாயனூர் காவல் நிலையம்

இதனால், அந்த இளம்பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, மாயனூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடிவெள்ளியை கொண்டாடும்வகையில் அகல்விளக்கு ஏற்றி கொண்டாடிய இளம்பெண்ணின் உடலில் தீ பற்றி எரிந்து இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு