Published:Updated:

சிகிச்சையில் இருந்த தந்தை இறப்பு; மகனுக்கும் கொரோனா! - கரூர் அதிர்ச்சி

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ( நா.ராஜமுருகன் )

வயோதிகம் காரணமாக எதிர்ப்புச் சக்தி அவரது உடலில் குறைந்து இருந்ததாகவும் கொரோனா வைரஸுக்கு எதிரான சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்க மறுத்ததால், அவர் உயிரிழந்துள்ளார். இறந்த முதியவரின் மகனும் கொரோனா நோய் வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது மகனும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருமிநாசினி தெளிப்பு
கிருமிநாசினி தெளிப்பு
நா.ராஜமுருகன்
`5 நாளா சாப்பிடலண்ணே!' - கதறிய சர்க்கஸ் குழந்தைகள்; பிராணிகளுக்கும் சேர்த்து உணவளித்த கரூர் ஆய்வாளர்

கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. கரூர் மாவட்டத்தில் இதுவரை 41 நபர்களுக்குக் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு, கரூர் மாவட்டமே ரெட் சோன் அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கோவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, இதுவரை 159 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 142 நபர்களுக்குக் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
நா.ராஜமுருகன்

இதில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 41 பேர் மட்டுமே. மீதம் உள்ளவர்கள் திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதால், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி, அதாவது ஐந்து நாள்களுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து, 96 வயது உள்ள முதியவர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார். இதையடுத்து, கடந்த 5 நாள்களாக இந்த முதியவருக்கு தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாள்களாக முதியவரின் இருதயத் துடிப்பு குறைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டுப் பேசும் திறன் குறைந்துள்ளது. வயோதிகம் காரணமாக எதிர்ப்புச் சக்தி அவரது உடலில் குறைந்து இருந்ததாகவும் கொரோனா வைரஸுக்கு எதிரான சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கிருமிநாசினி தெளிப்பு
கிருமிநாசினி தெளிப்பு
நா.ராஜமுருகன்

இறந்த முதியவரின் மகனும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா நோய் வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டதால் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும், அவர் மூலமாக அவரது 95 வயது தந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் மருத்துவ வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் முதல் இறப்பு ஏற்பட்டுள்ளதால், கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு