Published:Updated:

மது கிடைக்காததால், ஒருவர் தற்கொலை... கேரளா துயரம்!

மது கிடைக்காததால், தற்கொலை செய்த சனோஜ்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மது கிடைக்காததால், ஒருவர் தற்கொலை... கேரளா துயரம்!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
மது கிடைக்காததால், தற்கொலை செய்த சனோஜ்

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ``இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியா எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை உலகம் முமுவதும் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில், கொரோனா பரவத் தொடங்கியது. தொடர்ந்து, ஜனவரி 23-ம் தேதி கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த வுகான் நகர் மற்றும் ஹூபே மாகாணத்தை லாக்டவுன் செய்தது சீனா.

கொரோனா
கொரோனா

தற்போது உலகம் முழுவதும் 5,00,000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். சீனா வில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. ஏழு வாரங்களுக்குப் பிறகு மார்ச் 11-ம் தேதி முதல் வுகான் நகரில் சில தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தற்போது ஹூபே மாகாணம் உள்ளிட்ட சீனாவில் கடந்த ஐந்து நாள்களாக சமூகப் பரவல் இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கே கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல, கேரளாவிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், மது அருந்துவோர் மதுபாட்டில்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். திருச்சூர் மாவட்டத்தில் குன்னம்குளம் அருகேயுள்ள துவானுர் கிராமத்தைச் சேர்ந்த சனோஜ் (வயது 35) மது பாட்டில் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Tasmac bar
Tasmac bar

கடந்த இரு நாள்களாக மது பாட்டில் கிடைக்காமல் அடிக்கடி சனோஜ் புலம்பிக் கொண்டிருந்ததாக அவரின் உறவினர்கள் போலீஸாரிடத்தில் தெரிவித்தனர். அதனடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரள கலால் வரித்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன், ``மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். மதுவுக்கு அடிமையான நான்கு பேரை மது மீட்பு மையத்தில் சேர்த்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.