Published:Updated:

`ஏமாற்றிய ஏஜென்ட்; திடீரென இறந்த கணவர்!' - கேரளாவுக்கு வரமுடியாமல் வீடியோ காலில் கதறிய மனைவி

வீடியோ காலில் கதறிய பிஜி
வீடியோ காலில் கதறிய பிஜி

நேற்று முன்தினம் கலமசேரியிலிருந்து பிஜிக்கு போன் வந்துள்ளது. அதை எடுத்துப் பேசியவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியைச் சேர்ந்த பெண் பிஜிமோல். இவரது கணவர் ஸ்ரீஜித்துக்குச் சென்ற வருடம் புற்றுநோய் தாக்கவே கடந்த ஒன்பது மாதங்களாக சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழித்துவருகிறார். ஒருபுறம் 15, 8 மற்றும் 5 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு உணவு, மறுபுறம் புற்றுநோய் பாதித்த கணவன் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தவித்த பிஜிமோல் வேலைக்காக துபாய் செல்ல தீர்மானித்தார்.

இதற்காக தனக்குத் தெரிந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கடனாக வாங்கி அதை ஏஜென்டிடம் கொடுத்துவிட்டு துபாய்க்குப் பயணமானார். துபாய் சென்ற பிறகுதான் தெரிந்தது அவரை ஏஜென்ட் ஏமாற்றிவிட்டார் என்பது.

ஸ்ரீஜித் - பிஜிமோல்
ஸ்ரீஜித் - பிஜிமோல்

ரூ.3 லட்சத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கான விசாவைத் தயார் செய்துகொடுப்பதற்கு மாறாக சுற்றுலா விசாவை அதுவும் ஒரு மாத காலத்துக்குச் செல்லுபடியாகும் விசாவைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருந்தினாலும் குடும்பத்தின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அங்கேயே தங்கி சில மலையாளிகளின் உதவியுடன் வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையே, நேற்று முன்தினம் இவரது திருமண நாளில் கலமசேரியிலிருந்து பிஜிக்கு போன் வந்துள்ளது. அதை எடுத்துப் பேசியவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்.

கேரளத்தில் `தொற்றுநோய் தடுப்புச் சட்டம்' -கொரோனா எதிரொலியால் அறிவித்த பினராயி விஜயன்

ஆம்... அவரின் கணவர் ஸ்ரீஜித் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு துபாயில் தான் தங்கியிருந்த வீட்டிலேயே உறைந்து போய் இருந்துள்ளார். கணவர் இறந்ததை அடுத்து ஊருக்கு வரத் தீர்மானித்துள்ளார் பிஜி. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் அவருக்கு இடியாய் வந்து விழுந்துள்ளது.

`ஏமாற்றிய ஏஜென்ட்; திடீரென இறந்த கணவர்!' - கேரளாவுக்கு வரமுடியாமல் வீடியோ காலில் கதறிய மனைவி

இதன்பிறகு, தனது கணவரின் உடலை வீடியோ காலில் பார்த்துக் கதறியுள்ளார் பிஜி. கணவரின் இறுதிச் சடங்கு பிஜி இல்லாமலே நடந்துள்ளது. இதை வீடியோ காலில் அழுதுகொண்டே பார்த்துள்ளார். அவரை சமாதானப்படுத்த முடியாமல் அவரது உறவினர்களும் நண்பர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மூன்று பெண் குழந்தைகளையும் தற்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பிஜியின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். தற்போது மூன்று பெண் குழந்தைகளும் தந்தையும் தாயும் இல்லாமல் தவிக்கின்றனர். ஏற்கெனவே கொரோனா தீவிரத்தால் அச்சப்பட்டு இருக்கும் கேரள மக்கள் இந்தச் செய்தியால் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு