Published:Updated:

ஆஸ்திரேலியா ரிட்டர்ன்; அமைச்சருடன் காலை உணவு!-சி.வி.சண்முகம் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட தங்கை மகன்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டில் அவரது தங்கை மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். இவரது வீடு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டைப் பிள்ளைத் தெருவில் இருக்கிறது. அவரது தங்கை வள்ளி இளங்கோவனின் மகன் லோகேஷ், வயது 26. 22 ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் வள்ளி உயிரிழந்துவிட்டதால் லோகேஷ் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பராமரிப்பில் அவரது வீட்டிலேயே வளர்ந்து வந்திருக்கிறார். சென்னை தனியார் கல்லூரியில் E.E.E முடித்த இவர் மேல் படிப்புக்காக சில ஆண்டுகள் ஆஸ்திரேலியா சென்றிருந்தாகக் கூறப்படுகிறது. அங்கு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு 6 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பிய லோகேஷ், தனது மாமா சி.வி.சண்முகத்தின் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.

லோகேஷ்
லோகேஷ்

தங்கை மகன் என்றாலும் லோகேஷனை தனது மகனாகவே வளர்த்து வந்திருக்கிறார் அமைச்சர் சண்முகம். இன்று காலை வழக்கம்போல லோகேஷுடன் காலை உணவை முடித்துவிட்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்திற்குக் கிளம்பிவிட்டார். காலை உணவை முடித்துவிட்டு இரண்டாவது மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்ற லோகேஷ் 3.30 மணி வரை மதிய உணவுக்கு கீழே வரவில்லை என்று கூறப்படுகிறது.

`விஜயகாந்த் மட்டும் நன்றாக இருந்திருந்தால்..!' - விக்கிரவாண்டியில் உருகிய சி.வி.சண்முகம்

அறைக்கதவை தட்டிப் பார்த்தும் எந்த பதிலும் வராததால் வீட்டிலிருந்தவர்கள் இந்தத் தகவலை அமைச்சருக்கு தெரிவித்திருக்கின்றனர். உடனே அங்கிருந்த காவலர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது லோகேஷ் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

லோகேஷ்
லோகேஷ்

உடனே அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த அவரது உடல் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 3.30 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த தகவல் மாலை 7 மணிக்குத்தான் கசியத் தொடங்கியது. ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் லோகேஷின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்துவரும் காவல்துறை, அவரது நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

“உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்!”- இடைத்தேர்தல் வேகத்தில் சி.வி.சண்முகம்