Published:Updated:

தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற சிறுமி... கழுத்தைக் கவ்விக் கொன்ற சிறுத்தை! - அச்சத்தில் மக்கள்

உயிரிழந்த சிறுமி

இயற்கை உபாதை கழிக்க தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற சிறுமியை, சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற சிறுமி... கழுத்தைக் கவ்விக் கொன்ற சிறுத்தை! - அச்சத்தில் மக்கள்

இயற்கை உபாதை கழிக்க தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற சிறுமியை, சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
உயிரிழந்த சிறுமி

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரக்காடு பகுதியில் சிறுமி ஒருவரை சிறுத்தை தாக்கியதாக வனத்துறையினருக்கு இன்று நண்பகலில் அவசர அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. பதறிய வனத்துறை பணியாளர்கள் அரக்காடு பகுதிக்கு விரைந்தனர். அங்குள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் கழுத்தில் ரத்தம் வழிந்த நிலையில், சிறுமி ஒருவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக, சிறுமியை மீட்டு ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும்‌ ஏற்படுத்தியிருக்கிறது.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறையினர், ``அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கிஷாந்த் இந்தப் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைசெய்து வருகிறார். இவரின் 4 வயது மகள் சரிதா இயற்கை உபாதை கழிப்பதற்கு அருகில் உள்ள பாலன் என்பவரின் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றிருக்கிறாள். அங்கு மறைந்திருந்த சிறுத்தை சரிதாவின் கழுத்தை கவ்வியிருக்கிறது‌. தப்பிக்கப் போராடிய சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டிருகின்றனர். அதையடுத்து சிறுமியின் உடலை அங்கேயே விட்டுவிட்டு சிறுத்தை காட்டுக்குள் ஓடி மறைந்திருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் சிறுத்தையின் கால்தடங்கள் இருக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்தப் பகுதியில் முகாமிட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்" என்றனர்.