Published:Updated:

லோக்பால் உறுப்பினர் ஏகே திரிபாதி மரணம்... நீதித்துறையைக் கலங்கவைத்த கொரோனா!

திரிபாதி
திரிபாதி

அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சில தினங்களாக அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார்.

சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய்குமார் திரிபாதி. இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பால் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அவரையும் சேர்த்து மொத்தம் இந்த அமைப்புக்கு 4 உறுப்பினர்கள். இதற்கிடையே, கொரோனா அறிகுறியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டார் திரிபாதி. அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சில தினங்களாக அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில்தான் நேற்று இரவில் 9 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். மரணம் அடைந்த ஏ.கே.திரிபாதிக்கு வயது 62. நீதித்துறை பிரமுகர்கள் பலரும் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று, இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது.

திரிபாதி
திரிபாதி

இந்த நிலையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான திரிபாதி கொரோனாவால் உயிரிழந்திருப்பது இந்தியாவின் நீதித்துறை உட்பட பல முக்கியப் பதவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவதாக உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்குப் பலியாகியிருப்பது கவலையளித்துள்ளது.

நீதிபதி திரிபாதி கடைசியாக மார்ச் 20 அன்று லோக் பால் அலுவலகத்துக்கு வந்து சென்றார் எனக் கூறப்படுகிறது. இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் லோக்பால் அலுவலகக் கட்டடம் பனர் சுத்திகரிக்கப்பட்டது. அனைத்து லோக்பால் உறுப்பினர்களும் டெல்லியின் கிட்வாய் நகரில் ஒரே குடியிருப்பில் வசிப்பதாலும் அங்கும் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு