Published:Updated:

`கொரோனாத் தொற்று; விரட்டிய குடும்பம்!' - மாடியிலிருந்து குதித்த மதுரை முதியவர்

கொரோனா - முதியவர்
கொரோனா - முதியவர்

முதியவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. உடனே அவர் குடும்பத்தினர், வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள் என்று விரட்டியுள்ளனர்.

கொரோனா பாதித்தவுடன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு விரட்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழே விழுந்த முதியவர்
கீழே விழுந்த முதியவர்
என்.ஜி.மணிகண்டன்

மதுரை பழங்காநத்தத்தில் கடந்த 27-ம் தேதி 60 வயது முதியவர் ஒருவர் சாலையோரம் மயங்கிக் கிடந்தார். உடனே அப்பகுதி இளைஞர்கள் அவரைப் பற்றி சுகாதாரத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அந்த முதியவரை வாகனத்தில் ஏற்றி திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் போதிய வசதிகள் இல்லை, அதனால் இந்த முடிவு எடுத்துவிட்டார் என்றும், குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கிவிட்டதால் இந்த முடிவுக்கு வந்துவிட்டார் என்று இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்ள பலர், 'சாப்பாடு, தண்ணீர் நேரத்துக்கு வருவதில்லை, 300-க்கும் மேற்பட்டோர் இங்கு இருகிறோம். ஆனால், எந்த அடிப்படை வசதிகளும் இல்லை, அதனால் எங்களை வீடுகளுக்கு அனுப்புங்கள்' என்று புகார் எழுப்பி வருகின்றனர்.

புதுச்சேரி: முதல்வர் அலுவலகத்தில் கொரோனா; தனிமையில் நாராயணசாமி

முதியவர் தற்கொலை பற்றி நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், ''ஓரளவு நல்லநிலையில் அவருடைய குடும்பத்தினர் உள்ளனர். சமீபத்தில் அவருக்கு உடல்நலமில்லாமல் போயுள்ளது. பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. உடனே அவர் குடும்பத்தினர், வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள் என்று விரட்டியுள்ளனர். குடும்பத்தினர் திடீரென்று வெறுத்ததும் என்ன செய்வதென்று தெரியாத அவர், தெரு ஓரத்தில் படுத்திருந்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது இந்த விவரத்தை கூறியவர், தன்னை யாரும் தொட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். அதோடுதான் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி, அவரை கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் சேர்த்தோம். இந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கியதும் சேர்ந்து மனரீதியாகப் பாதிக்கப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்'' என்றார்.

மரணம்
மரணம்
மாதிரிப் படம்

கொரோனா நோயாளிகளுக்கு மனரீதியான சிகிச்சையும் கொரோனா சிகிச்சை மையங்களில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வகையான வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா: `அப்பா, என்னால் சுவாசிக்க முடியவில்லை!’ -கலங்க வைத்த வீடியோ

குடும்பத்தினர் விரட்டிய கவலையோடு தனிமை முகாமில் இருந்திருக்கிறார். `சரியான உணவு, குடிநீர் வசதிகள் இல்லாததுதான் தற்கொலைக்கு காரணம்’ என்று மாடியிலிருந்து குதித்து கீழே விழுந்தபோது அங்கிருந்தவர்களிடம் அவர் கூறியிருக்கிறார்ர். இதை சிலர் மொபைலில் பதிவு செய்திருக்கிறார்கள். அதனால், அவர் தற்கொலைக்கு மருத்துவத்துறையின் கவனிப்பின்மைதான் காரணம் என்றும் புகார் எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு