Published:Updated:

`5 வருடத்துக்குப் பின் சொந்த ஊர்ப் பயணம்; விமானத்திலேயே பிரிந்த உயிர்!’ - திருச்சியில் சோகம்

வேல்முருகனுக்கும் நிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன இரண்டாவது மாதத்திலேயே அவர் மலேசிய நாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று ஐந்து வருடங்கள் கழித்து மனைவி, குடும்பத்தினரைப் பார்க்க வந்தவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் பயணம் செய்தார். விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

விமான நிலையம்
விமான நிலையம்

பயணிகள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளிவந்தனர். ஆனால் வேல்முருகன் மட்டும் சீட்டிலே தலையைச் சாய்த்தவாறு கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார். விமான நிலைய ஊழியர்கள் அவரிடம் சென்று பார்த்தபோது உடல் அசைவின்றி இருந்திருக்கிற.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக விமான நிலைய மருத்துவர் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விமானத்துக்குள் வந்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்ததுவிட்டதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

வேல்முருகன்
வேல்முருகன்

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் வேல்முருகனின் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அறிந்த விமான நிலைய காவல்துறையினர், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி: விமான நிலையத்தில் தொடரும் தங்கக் கடத்தல் - கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பா?

என்ன நடந்தது என்று வேல்முருகனின் உறவினர்களிடம் பேசினோம். ``வேல்முருகனுக்கும் நிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன இரண்டாவது மாதத்திலேயே அவர் மலேசிய நாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

மனைவி
மனைவி

அங்கு ரவி என்பவருக்குச் சொந்தமான சலூன் கடையில் முடிதிருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்திருக்கிறார். கடையின் உரிமையாளர் ரவி இறந்துவிடவே, அவருடைய மகன்தான் கடையை நிர்வகித்து வந்திருக்கிறார். இந்தநிலையில் வேல்முருகனுக்கு ஒப்பந்த காலம் முடிந்து ஊர் திரும்ப வேல்முருகன் முற்பட்டபோது, `கடையில் ஆள் இல்லை. நீங்கள்தான் வேலை பார்க்கவேண்டும்’ என்று கட்டாயப்படுத்தி வேலை வாங்கியிருக்கிறார்கள்.

வேல்முருகனைத் தமிழகத்துக்குத் திருப்பி அனுப்பும் எண்ணம் கொஞ்சம் கூட அவர்களுக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், நடந்தவற்றைத் தனது குடும்பத்தாரிடம் சொல்லியிருக்கிறார். அவர்களும் பதறிப்போய், ``தம்பி நமக்குப் பணம் முக்கியம் இல்லைப்பா... நீ எப்படியாவது ஊருக்கு வந்துருப்பா" என்று சொல்லி அவர்களே டிக்கெட் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

உறவினர்கள்
உறவினர்கள்

அவரும் ஒருவழியாகத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மலேசியாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏறி வந்தபோது நடுவானில் வரும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்துவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் சொன்னார்கள். அதன் பிறகுதான் நாங்கள் இங்கு வந்தோம்” என்று தழுதழுத்தார்கள்.

மனைவியுடன் வேல்முருகன்
மனைவியுடன் வேல்முருகன்

``அஞ்சு வருசமா குடும்பத்தைப் பிரிஞ்சிருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல குடும்பத்தைப் பார்க்கபோறேன்னு சொல்லிவிட்டு கிளம்புனியேப்பா... இன்னைக்கு செத்து பிணமா வந்திருக்கியே...’’ என்று அவரின் மனைவி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறும் சத்தம் காண்போரைக் கண்கலங்கவைத்துவிட்டது.

தேனி: நேருக்கு நேர் மோதிய லாரி - ஆம்னி பேருந்து! -இரண்டு ஓட்டுநர்கள் பலி; சிகிச்சையில் 6 பேர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு