Published:Updated:

எலி பேஸ்ட் கொடுக்கப்பட்ட 4 மாத குழந்தைக்குத் தீவிர சிகிச்சை! தாய் தற்கொலை; சோகப் பின்னணி!

சிறிது நேரத்தில் அரை மயக்கத்தில் தாயும் குழந்தையும் அலற, சத்தம் கேட்டுக் கூடிய அக்கம் பக்கத்தினர் நிலைமையைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகேயுள்ள பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன், அனிதா தம்பதியர். ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மறுபடியும் இந்தத் தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ``கணவரின் மேஸ்திரி வேலையில் கிடைக்கும் குறைந்தபட்ச வருமானத்தை வைத்துக்கொண்டு எப்படி இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்தெடுக்கப் போகிறோம்" என குழந்தை பிறந்ததிலிருந்து தாய் அனிதா வருத்தத்தில் இருந்திருக்கிறார்.

இதுபோக பிறந்த குழந்தையின் கால்கள் சற்று ஊனமாக இருந்ததும், அனிதாவை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. ஒருகட்டத்தில் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்வது என அனிதா முடிவெடுத்திருக்கிறார். அதன்படி நேற்று முன்தினம் இரவு பாலில் எலி பேஸ்ட்டைக் கரைத்து குழந்தைக்குக் கொடுத்துவிட்டு, அவரும் குடித்திருக்கிறார். சிறிது நேரத்தில் அரை மயக்கத்தில் தாயும் குழந்தையும் அலற, சத்தம் கேட்டுக் கூடிய அக்கம் பக்கத்தினர் நிலைமையைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

தற்கொலை
தற்கொலை
அம்மாவை இழந்த சோகம்; 20 வயது இளைஞர் கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை!

உடனே அனிதாவையும் குழந்தையையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அனிதா சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இறப்பதற்கு முன்பு அனிதா போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ``இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததோடு, காலில் ஊனத்தோடு இருக்கிறதே என தினமும் பால் ஊட்டும்போது மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால்தான் குழந்தையைக் கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என இப்படிச் செய்துவிட்டேன்" எனக் கலங்கியிருக்கிறார். இது குறித்து தொப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, குழந்தை ஊனத்துடன் பிறந்த விரக்தியில் அனிதா தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு