Published:Updated:

`கடன் வாங்கி மது குடித்ததால் மனைவிக்குக் கோபம்!' -விபரீத முடிவெடுத்த சவரத் தொழிலாளி

அந்தோணி
அந்தோணி

குழந்தைகள் பசியால் தவிக்கும் நிலையில், கடன் வாங்கி மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றதால் கணவன் மீது மனைவி கோபம் அடைந்துள்ளார்.

கொரோனா நோய் பரவலைத் தவிர்க்க, நான்காம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக ஊரடங்கு காரணமாகக் கடைகள் திறக்கப்படவில்லை. அதனால் தொழிலாளர்கள் வேலையின்றி கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டபோதிலும், சலூன்கள் மூலம் கொரோனா பரவக் கூடும் என்கிற அச்சம் காரணமாக அவற்றைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் விதிகள் தளர்த்தப்பட்டதில், ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

`நாளொன்றுக்கு 500 பேர்; 7 வண்ண டோக்கன்கள்!' -டாஸ்மாக் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாடு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், அந்தோணி. 39 வயதான இவர், திசையன்விளை நகரத்தில் உள்ள சலூன் கடையில் வேலை செய்துவந்தார். இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை மற்றும் மனைவியுடன் வசித்துவந்த இவர், ஊரடங்கால் வேலை இல்லாததால் பலரிடமும் கடன் வாங்கியுள்ளார்.

`வயநாட்டிலிருந்து மது வாங்கிச் சென்ற நபர்; மூடப்பட்ட 3 டாஸ்மாக் கடைகள்!' - அச்சத்தில் நீலகிரி

வேலை இன்றி குடும்பத்துடன் தவித்துவந்த நிலையில், நேற்று அவர் கடன் வாங்கி மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதனால் அதிருப்தியடைந்த அவரது மனைவி அவரைக் கண்டித்திருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

வேலை இல்லாததால் குழந்தைகள் பசியால் தவிக்கும் நிலையில், கடன் வாங்கி மது குடித்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மிகவும் வருத்தம் அடைந்த அவர், இரவில் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.  அவரது உடலைக் கைப்பற்றிய திசையன்விளை போலீஸார், நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். 

மதுக்கடைகளை அரசு திறந்த பிறகு, மாநிலம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்துவருவது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
சமூக ஆர்வலர்கள்

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள். இந்த நிலையில், மூன்று கைக்குழந்தைகளின் தந்தை குடிபோதை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு