Published:Updated:

வீட்டை எதிர்த்து கல்யாணம்; 2 மாதம் மட்டுமே நீடித்த சந்தோஷம்! -தம்பதிகள் வாழ்க்கையில் விளையாடிய விதி

நைமா - நந்தகிஷோர்
நைமா - நந்தகிஷோர்

மிரட்டல்களுக்கு மத்தியில் தங்கள் காதல் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக, அதே ஊரில் இருவரும் குடும்பம் நடத்திவந்துள்ளனர். ஆனால், இவர்கள் வாழ்க்கையில் விதி விளையாடியது.

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாவகாட் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகிஷோர். இவரும் இதேபகுதியைச் சேர்ந்த நைமா என்ற பெண்ணும் பள்ளிக் காலத்திலிருந்தே காதலித்துவந்துள்ளனர். ஆனால், இவர்கள் காதலுக்கு நைமா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

காரணம், கிஷோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர், நைமாவோ இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். இதனால் இவர்கள் காதல் கைகூடுவதில் பிரச்னை எழுந்தது. ஒருகட்டத்தில் பிரச்னை வலுக்கவே, வீட்டிலிருந்து வெளியேறிய நைமா, காதலன் கிஷோரைக் கரம்பிடித்தார். கடந்த ஜனவரி 5-ம் தேதி, இருவருக்கும் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

நைமா - நந்தகிஷோர்
நைமா - நந்தகிஷோர்

திருமணம் முடிந்த பிறகும் இருவருக்கும் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் இருவருக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்துள்ளனர். இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்று மிரட்டல்கள் வந்தாலும், ஒன்றாக வாழ்வதை இருவரும் கைவிடவில்லை. மிரட்டல்களுக்கு மத்தியில் தங்கள் காதல் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக, அதே ஊரில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், இவர்கள் வாழ்க்கையில் விதி விளையாடியது.

ஓமனிலிருந்து திரும்பிய மனைவி; அதே விமானத்தில் சடலமாக வந்த இளைஞர்! - நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்

நேற்று மதியம் 1 மணி அளவில், நைமா வீட்டுக்கு அருகில் உள்ள வங்கிக்கு தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது, பேருந்தை முந்திச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரேவந்த டாரஸ் லாரிமீது மோதியுள்ளார். இதில் நைமா நிலைகுலைந்து அங்கேயே சரிந்துவிழ, அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலனில்லை. நைமா ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அதன்பின்னர், நைமாவின் பெற்றோர்கள் அவரை பார்க்க வந்துள்ளனர். திருமணம் செய்தபோது வராத பெற்றோர், இறந்தபிறகு வந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நைமாவைத் தங்கள் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டு, அவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்துள்ளனர். வீட்டை எதிர்த்து, சமூகத்தை எதிர்த்து வாழத் தொடங்கிய இந்தத் தம்பதியின் வாழ்க்கை இரண்டு மாதங்களில் முடிவுக்குவந்துள்ளது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

`சுபஸ்ரீ வரும் நேரம் பார்த்தா பேனர் விழவேண்டும்?’- `விதி' என விவரித்த பிரேமலதா
அடுத்த கட்டுரைக்கு