Published:Updated:

`தனிமை; உச்சகட்ட மனஅழுத்தம்!’- இத்தாலியில் தற்கொலை செய்துகொண்ட நீலகிரி மருத்துவ மாணவர்

நீலகிரி மருத்துவ மாணவர் பிரதிக்‌ஷ்
நீலகிரி மருத்துவ மாணவர் பிரதிக்‌ஷ்

இத்தாலியில் மருத்துவம் பயின்றுவந்த நீலகிரி மாவட்ட மாணவர், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சதானந்த். தேயிலை விவசாயி. இவருடைய இரண்டாவது மகன் பிரதிக்ஷ் (21), என்பவர் இத்தாலியிலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்துள்ளார்.

பிரதிக்‌ஷ்
பிரதிக்‌ஷ்

மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்துவந்த பிரதிக்ஷ், நேற்று முன்தினம் திடீரென 3-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சோக நிகழ்வு குறித்து நம்மிடம் பகிர்ந்த பிரதிக்ஷின் உறவினர் ஒருவர்,``இவருடைய சகோதார் இத்தாலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். அவர் வசிக்கும் பகுதிக்கும், இவரது அறைக்கும் 50 கி.மீ தொலைவு இருக்கும். இதனால், பிரதிக்‌ஷ் கல்லூரி அருகில் தனி அறை எடுத்துத் தங்கி, படித்துவந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு இத்தாலியில் அதிகரிக்கவே, கல்லூரியிலிருந்து அனைத்து நண்பர்களும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். ஆனால், பிரதிக்‌ஷ் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், அறையில் தனிமையில் இருந்துள்ளார்.

பிரதிக்‌ஷ்
பிரதிக்‌ஷ்

தெடர்ந்து தனிமையில் இருந்ததால் அவருக்கு மன அழுத்தம் அதிகமாகியிருக்கிறது. இதை அறிந்துகொண்ட அவரின் சகோதரர், தான் வசிக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்துவந்தார். ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர், தனது சகோதரர் அறையில் தங்கி, அங்கிருந்தபடியே ஆன்லைனில் படித்துவந்தார். கூடவே சிகிச்சையும் பெற்றுவந்தார்.

சென்னை: `குடும்ப வாழ்க்கை; உடல் ஆரோக்கியமின்மை' - திருமணமான 2 மாதத்தில் பட்டதாரிப் பெண் தற்கொலை

கடந்த 10-ம் தேதி தன் அப்பாவுடன் வீடியோ காலில் பேசினார். அப்போது, தனக்கு மன அழுத்தம் அதிகமிருப்பதாகக் கூறியுள்ளார் பிரதிக்‌ஷ். அவரின் தந்தையும், `இந்தியா வந்து விடு. எந்தப் பிரச்னையும் இருக்காது’ என்று கூறியிருக்கிறார். அதற்கு, பிரதிக்‌ஷ் 13-ம் தேதி இந்தியா வருவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில், தனது சகோதாரர் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்’’ என்று கண்கலங்கச் சொன்னார்.

பிரதிக்‌ஷ்
பிரதிக்‌ஷ்

அவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவரின் சகோதரரும் உடன் இருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு