Published:Updated:

தேனி: கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு... குளிக்கச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீயணைப்புத்துறையினருடன் பொதுமக்கள்
தீயணைப்புத்துறையினருடன் பொதுமக்கள்

பெரியகுளம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், இளைஞர்கள் சிக்கினர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை தெற்குப் புதுத்தெருவைச் சேர்ந்த குருகார்த்திக், பாண்டி, ராமசாமி, செல்லராமன், இ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், கோவையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் நண்பர்கள். பெரியகுளம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இந்தநிலையில், பல வருடங்களுக்குப் பிறகு அனைவரும் பெரியகுளத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது, கல்லாற்றில் குளிக்கலாம் எனத் திட்டமிட்டு, நேற்று மாலை 4 மணிக்கு பெரியகுளம் அருகேயுள்ள கல்லாற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.

தீயணைப்புத்துறையினரும் பொதுமக்களும்
தீயணைப்புத்துறையினரும் பொதுமக்களும்

தொடர்மழை காரணமாக, கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆறு பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், குருகார்த்திக், பாண்டி, அய்யனார் ஆகிய மூவர் மட்டும் நீச்சலடித்துக் கரை சேர்ந்திருக்கிறார்கள்.

தேனி: `எவ்வளவு நகையானாலும் விற்றுத் தருவேன்!' - 27 பவுன் நகையுடன் மாயமான நபர் கைது

செல்லராமன், ரமேஷ், ராமசாமி ஆகியோரைக் காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது. தப்பித்த மூவரும், இது தொடர்பாக தங்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மேல்மங்கலம் தடுப்பணைப் பகுதி
மேல்மங்கலம் தடுப்பணைப் பகுதி
முல்லைப் பெரியாறு மதுரை குடிநீர் திட்டம்... எதிர்க்கும் தேனி விவசாயிகள்... ஏன்?

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடினர். இரவு நேரமானதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும், ஆற்றில் இறங்கி தொடர்ந்து தேடிவந்தனர். அப்போது, ராமசாமி, ரமேஷ் இருவரையும் மீட்டனர். படுகாயமடைந்த ராமசாமி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். செல்லராமனைத் தொடர்ந்து தேடிவந்தனர். இந்தநிலையில், இன்று அதிகாலை பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் தடுப்பணையில் செல்லராமனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட துயரச் சம்பவம், பெரியகுளம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு