Published:Updated:

`இளைஞர் தற்கொலையை அடுத்து நெஞ்சுவலி மரணம்' - அதிர்ச்சி கொடுக்கும் தேனி தனிமைப்படுத்தல் முகாம்

தனிமைப்படுத்தல் முகாம்
தனிமைப்படுத்தல் முகாம்

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது, மேலும், ஒருவர் நெஞ்சுவலி காரணமாக இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்குள் வருபவர்களை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காடுரோடு சோதனைச் சாவடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னை உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென்றால், 14 நாள்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென்றால், மாவட்ட நிர்வாகத்தில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றனர்.

`வேதிப்பூச்சு கொண்ட பழங்காலப் பானைகள்!’ - தேனி அருகே விவசாய நிலத்தில் ஆச்சர்யம்
தனிமைப்படுத்தல் முகாம்
தனிமைப்படுத்தல் முகாம்
மாதிரிப் படம்

இந்த நிலையில், தேனி மாவட்டம் பாலகோம்பையைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 45). இவர், கடந்த மே 19-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தேனி வந்துள்ளார். கொரோனா பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. அதையடுத்து, ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு வேலுச்சாமி அழைத்துச் செல்லப்பட்டு, தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இன்று காலை, வேலுச்சாமிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு, கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குப் போகும்வழியில் அவர் உயிர் பிரிந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆண்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சசிகுமார்
சசிகுமார்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (வயது 20) என்ற இளைஞர், தனிமைப்படுத்தல் முகாமில் தற்கொலை செய்துகொண்டார். கடந்த மார்ச் 27-ம் தேதி, போடியில், வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், சாலை ஓரம் படுத்து உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை செய்தார்.

தேனியில் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

`பாக்கெட்டில் உள்ள தேதியைப் பாருங்கள்..!' -தேனி மக்களை அச்சுறுத்தும் காலாவதி உணவுப் பொருள்கள்
அடுத்த கட்டுரைக்கு