Published:Updated:

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார்! - நேரில் வந்து ஆறுதல் தெரிவித்த சசிகலா

 ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்த சசிகலா
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்த சசிகலா

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டதாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜயலெட்சுமி
விஜயலெட்சுமி

கடந்த சில நாள்களாவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவரின் மறைவுக்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

பெருங்குடி தனியார் மருத்துவமனைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் மருத்துவமனைக்கு வந்து ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து சசிகலாவும் மருத்துவமனை வந்து ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். கண் கலங்கிய பன்னீர்செல்வத்தின் கையைப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார் சசிகலா. சசிகலா மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டிய காரில் வந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஓ.பி.எஸ்-ஸின் மனைவி விஜயலெட்சுமியின் உடல், ஓ.பி.எஸ்-ஸின் சொந்த ஊரான பெரியகுளத்துக்கு இன்று மதியம் 2 மணிக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு