Published:Updated:

`கண்ணிவெடி வழக்கு; 28 ஆண்டுகள் சிறை!’ - வீரப்பன் கூட்டாளி பிலவேந்திரன் மரணம்

பிலவேந்திரன்
பிலவேந்திரன்

1993-ம் ஆண்டு, வெள்ளோடு வந்த கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். வழக்கு விசாரிக்கப்பட்டு பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானப்பிரகாசம், சைமன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளியாகக் கருதப்பட்டவர் பிலவேந்திரன். இவர் வீரப்பனோடு சேர்ந்து பாலாறு வனப்பகுதியில் கண்ணிவெடி வைத்ததாகக் கூறப்படுகிறது. பிலவேந்திரன் தடா வழக்கில் கைது செய்யப்பட்டு, மைசூர் சிறையில் 28 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவந்தார். இந்நிலையில், சிறைக்குள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று மரணமடைந்தார் பிலவேந்திரன.

வீரப்பன்
வீரப்பன்

கர்நாடக மாநிலம், அனூர் வட்டம், மார்டல்லி என்ற ஊரைச் செர்ந்தவர் பிலவேந்திரன். இவருடைய அப்பா மோரிஸ், கவுண்டர் தாலுகா போர்டு உறுப்பினராக இருந்தார். எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வந்த பிலவேந்திரனுக்கு, சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்கள் அனைத்தும் தெரியும். 1991-92-ம் ஆண்டுகளில் வீரப்பன், நல்லூரை ஒட்டிய காட்டுப்பகுதியில் இருந்தார். அப்போது பிலவேந்திரன் தோட்டத்துவழியாக நிறைய பேர் வீரப்பனைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.

தகவல் தெரிந்து பிலவேந்திரனும் வீரப்பனைச் சந்தித்திருக்கிறார். வீரப்பன் பேச்சில் ஈர்க்கப்பட்ட பிலவேந்திரன், அரிசி, பருப்பு எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். 14.2.1992-ல் வீரப்பனின் முக்கியக் கூட்டாளி ஆசாரி குருநாதன் என்பவரை கர்நாடக எஸ்.டி.எஃப் போலீஸார் கைது செய்தார்கள். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிலவேந்திரன் அரிசி, பருப்பு வாங்கிக் கொடுத்த தகவல் தெரிய வந்திருக்கிறது.

கைது
கைது

பின்னர், குழந்தையின் எதிர்காலம் கருதி மார்டல்லியிலிருந்து குடும்பத்தோடு கிளம்பிவிட்டார் பிலவேந்திரன். ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பக்கத்தில் ஒரு தோட்டத்தைக் குத்தகைக்குப் பிடித்து கரும்பு நடவு செய்தார். தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் மின்கம்பம் நடும் வேலைக்கு போனார். இந்தநிலையில் பாலாறு வனப்பகுதியில் வீரப்பன் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 22 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த மூன்று வழக்கிலும் பிலவேந்திரன் பெயரும் சேர்க்கப்பட்டது.

`நான் வளர்ச்சியை மட்டுமே பா.ஜ.க-வில் பார்க்கிறேன்!' - வீரப்பன் மகள் வித்யா ராணி

அதையடுத்து 1993-ம் ஆண்டு வெள்ளோடு வந்த கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரிக்கப்பட்டு பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானப்பிரகாசம், சைமன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவரின் கருணை மனுவும் கடந்த 2013-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

பிலவேந்திரன்
பிலவேந்திரன்

பிறகு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதியரசர் சதாசிவம், நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார். ஆனாலும், நால்வருக்குமான விடுதலை கேள்விக்குறியாகவே இருந்துவந்தது. இந்நிலையில், 2018-ல் சைமன் சிறையிலேயே இறந்தார். அவரை அடுத்து தற்போது பிலவேந்திரனும் சிறைக்குள் நோய்வாய்பட்டு இன்று இறந்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு