Published:Updated:

ஃப்ரிட்ஜில் வைத்த நூடுல்ஸைச் சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி! - திருச்சியில் சோகம்

திருச்சி அரசு மருத்துவமனை

ஃபிரிட்ஜில் வைத்த நூடுல்ஸை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃப்ரிட்ஜில் வைத்த நூடுல்ஸைச் சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி! - திருச்சியில் சோகம்

ஃபிரிட்ஜில் வைத்த நூடுல்ஸை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
திருச்சி அரசு மருத்துவமனை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி மருதமுத்து நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர் - மகாலட்சுமி தம்பதியர். சேகர் ஒரு ஜேசிபி ஆபரேட்டர். வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த இருவரும் காதலித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு சுஜிதா (6), சாய் தருண் (2) என இரண்டு குழந்தைகள். வெள்ளிக்கிழமை இரவு (17-ம் தேதி) மகாலட்சுமி நூடுல்ஸ் சமைத்து கணவர், குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கிறார். சாப்பிட்டது போக மீதமிருந்த நூடுல்ஸை காலையில் சாப்பிட்டுக்கொள்ளலாம் எனப் பக்கத்து வீட்டில் கொடுத்து ஃபிரிட்ஜில் வைக்கச் சொல்லியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

ஃப்ரிட்ஜில் வைத்திருந்த அந்த நூடுல்ஸை எடுத்துவந்த மகாலட்சுமி, சூடு பண்ணாமல் அப்படியே குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்திருக்கிறார். நூடுல்ஸைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குழந்தை சாய் தருணுக்குக் கடுமையான வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதில் சோர்ந்துபோன குழந்தை ஒரு கட்டத்தில் சுருண்டு விழுந்து மயங்கிப்போயிருக்கிறான். உடனே, பதறிப்போன மகாலட்சுமி குழந்தை சாய் தருணைத் தூக்கிக்கொண்டு நம்பர் ஒன் டோல்கேட் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு 'குழந்தையின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்' எனக் கூறியிருக்கின்றனர்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

அதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குச் செல்ல... அங்கு குழந்தை சாய் தருணைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது' எனக் கூறியிருக்கின்றனர். அதையடுத்து 'நூடுல்ஸ் சாப்பிட்டதில் 2 வயது குழந்தை பலி' என்ற தகவல் பரவி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது குறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே, 'நூடுல்ஸ் சாப்பிட்டதால் குழந்தை உயிரிழக்கவில்லை. குழந்தையின் உடலில் காயங்கள் இருக்கின்றன. இறப்பில் ஏதோ மர்மம் இருக்கிறது' என்ற தகவல் பரவி இந்த விவகாரத்தைக் கூடுதல் பரபரப்பாக்கியிருக்கிறது. இது குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``ஒரு வாரத்துக்கு முன்பு மூன்று சக்கர சைக்கிளிலிருந்து குழந்தை சாய் தருண் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், குழந்தையின் தாய் மகாலட்சுமி 'லோ பிபி'யால் சமீபத்தில் தூக்கிவைத்திருந்த குழந்தையோடு கீழே விழுந்திருக்கிறார். இதில் தாய்க்கும் குழந்தைக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது மட்டுமில்லாமல், குழந்தைக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டு உடலில் சில இடங்களிலும், ஆண் குறி பகுதியிலும் புண்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கிடையேதான் குழந்தை நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்திருக்கிறான். எனவே, குழந்தையின் இறப்புக்கு நூடுல்ஸ் மட்டும்தான் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. குழந்தையின் உடலில் இருந்த பிரச்னையை கவனிக்காமல் விட்டதன் காரணமாகக்கூட குழந்தை இறந்துபோயிருக்கலாம். மற்றபடி விசாரித்த வகையில் குழந்தையின்மீது பெற்றோர் இருவரும் பாசமாக இருந்ததாகவே அக்கம் பக்கத்தினர் கூறியிருக்கிறார்கள். எனவே, குழந்தை இறப்பில் பெற்றோர்மீது எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரேத பரிசதனை அறிக்கை வந்த பின்னர்தான் மற்ற விவரங்கள் அனைத்தும் தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism